பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தீசன் மனைவி (கி. மு. 307-267) தீசன் அரசியற்றுங் காலையில், அவன் மனைவி தன் கொழுநனுக்குப் பின், தன் கொழுந்தன் மகாநாகன் தானே அரசனாக முயன்று தன் புத்திரனின் இராச பட்டத்துக்கு இடறுகட்டையாக நிற்பானென நினைந்து. அவனுயிரைப் பறிப்பதற்காய், வாயொடுங்கிய ஓர் பாத் திரத்துட் கழுத்து மட்டாய் மாங்கனிகளை யடுக்கி, நஞ் சூட்டிய கனி ஒன்றை அவற்றின் மேலே வைத்து, அவற்றை உபகாரப் பொருளாக அவனுக்கு அனுப்பி வைத்தாள். குளக்கட்டு வேலையிலமர்ந்திருந்த மகாநாதன் இந்த அவகடத்தையறியாது பாத்திரத்தைப் பெற்று அச் சமயந்தன்னுடனிருந்த அவள் புத்திரனுக்கு அதினின் றெடுத்த முதற் கனியைக் கொடுக்கச் சிறுவன் அதை யுண்டு தகrணமே உயிர் விட்டான். பிறர்க்கிடு பள்ளந் தான்விழு பள்ளமாயிற்று'. 0 நூல்: இலங்கைச் சரித்திரம் (1994) பக்கம்16. நூலாசிரியர் : அர்ச் . சூசையப்பர் சபை சந்நியாசி. ரஞ்சித் சிங் கோஹினூர் வைரம் பண்டைக் காலத்தில் பாரத வீரர்களான பாண்டவர்கள் வைத்திருந்ததாகப் புராண கதைகள் கூறும். ஆனால் பிற்காலத்தில் அது கோல் கொண்டாவில் கிடைத்தது. பின்பு பதினேழாம் நூற். றாண்டில் மொகலாய சக்கரவர்த்தியாக விருந்த ஷாஜ ஹான் அவ்வைரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். பிறகு அது அவனது சந்ததியார்களிடமே யிருந்தது. கடைசியாக நாதர்ஷா இந்தியாவின் மேல் படை யெடுத்து டில்லியை யழித்த போது அவ் வைரத்தை