பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 இதைக் கேள்வியுற்ற அவனது சகோதரன் சேத்து ராயன் ஆறாத்துயரடைந்து உக்கிர ஆவேசங் கொண்டு தன் தமையனுக்குச் சதிசெய்த குப்பிச்சியையும் அவளது கூட்டத்தாரையும் மாடுகளைப் பிணைக்கட்டுவதுபோல் அவர்களைக் கட்டி ஒர் ஏரியில் யாவரையும் வெட்டும்படி செய்தான். இப்போதும் அவ்வேரியும் குன்றும் செங்கல் பட்டிற்கு மேற்கே 10 மைலிலும் பழைய சீவரத்திற்கும் பாலாற்றின் தென்பக்கத்திலு மிருக்கின்றன. இவற்றை பிணாயேரி யென்றும் குப்பிச்சிக்குன்று என்றும்அழைக்கப் பட்டு வருகின்றது. 6 நூல்: வருண தருப்பணம் (1907) பக்கம் - 255, 256. நூலாசிரியர்: கா . கோபால் நாயகர். (வன்னியகுல rத்திரிய மகாசங்க இன் ஸ்பெக்டர்) சரபோஜி மன்னனின் மனைவி முதற் சரபோஜி (1712 - 1728) - இம் மன்னன் சதாரா வம்சத்தைச்சார்ந்த ஒரு பெண்ணை மணந்தான். இவனுக்குச் சந்தான பாக்கியம் கிட்டவில்லை. இவனது ராணி, தான் கருத்தரித்ததாகப் பாசாங்கு செய்து, ரூபி என்னும் ஒருத்தியின் குழந்தையைத் தான் பெற்றதாக உலகிற் கறிவித்ததாகவும், அவனுக்கு ‘சாவாயி ஷஹாஜி" எனப் பெயர் வழங்கி வந்தது எனவும், அவ்வுண்மையைத் தன் சகோதரன் மூலம் அறிந்த சரபோஜி அவ் விராணி யையும் புதல்வனையும் தஞ்சையை விட்டு அகற்றி விட்டான் எனக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 0 நூல் : சரஸ்வதி மஹாலும் தஞ்சை வரலாறும். பக்கம் -37, 38. நூலாசிரியர் : O· A. {5rt grrTugyw oerr LÉ), BA., BL.,