பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 குப்பிச்சி திருவிடைச்சுரம் என்பது செங்கல்பட்டிற்குச் சமீபமாக தென்பாரி சத்திலுள்ளது. இதில்ஒர் ஆலயமுங் கோட்டையுமிருக்கின்றன. இக் கோட்டையின் அகல நிகளம் தெற்கு வடக்காக 1141 அடியும் கிழக்கு மேற்காக 1200 அடியும் இம்மதிலைச் சுற்றியுள்ள அகழி யின் அகலம் 30 அடியுமாக விருக்கின்றன. இக்கோட்டை தற்காலம் அழிவுற்றிருந்த போதிலும் ஆதியில் ஒர்சிறந்த சிறுநகரமாயிருந்த தென்பதற்குச் சந்தேகமில்லை. இச் சிறுநகரி னாலயத்தின் திரு இடைச்சுரநாதரைத் திரு ஞானசம்பந்தர் பாடிய தேவாரமே போதிய சான்றாகும். இவ்வளவு மகிமை பெற்ற rேத்திரத்திலே ஆதியிலே வம்சபரம்பரையாகச் சிற்றரசர்களால் சிறு நகரமாகிய திருவிடைச்சுரத்தை ஆளப்பட்டு வந்தது. இங்ங்னம் ஆண்டுவரும் நாட்களிலே கி. பி. 1509-ம் ஆண்டுக்கு மேல் கிருஷ்ணதேவ மகாராயர் விஜயநகர ராஜ்ஜியத்தை அரசுபுரிகையில் காந்தவராயன் சேத்துராயன் என்னும் இரண்டு சகோதரர் தங்கள் பழைய கோட்டையைப் பலப்படுத்தி அரசு செய்து வருகையில் இவர்கள் மேற்படி ராயர் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பகுதியைச் செலுத்தாமையால் இவ்வன்னியராகிய அரசர்மீது படை யெடுத்துச் செல்லும் படி படைத்தலைவர்க்குத் திட்டஞ் செய்து அனுப்ப, அவர்கள் இச்சிற்றரசர்களைச் செயிப் பதற்குக் கூடாமையாயிருந்தமையால் காந்தவராயன் அபிமானித்திருந்த குப்பிச்சி யென்னுந் தாசிக்கு நாலு பை பொன் லஞ்சங்கொடுப்பதாக அவளுக்குச் சொல்லிப் பாளையக்காரர் அனுப்பியபடியே அவள் :விஷத்தை வைத்துக் காந்தவராயனைக் கொன்று அவனது தலையை அரிந்து பாளையக்காரரிடம் சேர்த்துப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.