பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.37 பல்லாரிக்கு மேற்கே சுமார் 30 மைலுக்கப்பாலுள்ள ஹோஸ்பெட்டுக்கு ஆறு மைல் பாழடைந்திருக்கும் ஹம்பி என்று சொல்லப்படும் விஜயநகரம். நரபதி வம்சத்தின் முதலாவது அரசராகிய நரசிம்ம ராயருக்கு இளைய குமாரராக, கிருஷ்ண தேவராயர். தோன்றினார். அவர் சுமார் கி.பி. 1489-ல் நரசிம்ம ராயரது இரண்டாம் பெண் சாதி நாகம்மாள் வயிற்றில் உதித்தார். அவர் தன் தமையனும் நரசிம்மரது முதல் தாரத்தின் பிள்ளையுமான வீரநரசராயருக்குப் பிறகு கி.பி. 1509-ல் சிங்காதனமேறி, 22 ஆண்டுகள் இவ்வைய. கத்தை ஆண்டு வந்தார். - கிருஷ்ணதேவராயருக்கு அனேக மனைவியர் இருந் தனர். அவர்களில் இருவரே முக்கியமானவர். முதலில் அவர் கணிக்கிரியை யாண்ட வீரருத்திர கஜபதியின் பெண்ணாகிய சின்னதேவியை மணந்தார். ஆயினும் அம்மணம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க வில்லை. ஏனெனில் சின்னதேவியின் தாயார் முதலான வர்கள் கிருஷ்ணதேவரைத் தாசி மைந்தனென்று இழி வாகப் பேசி, பள்ளியறையில் அவரைக் கொல்லச் சின்ன தேவியைத் தூண்டினார்கள். அவளும் அவ்வாறே செய்ய எத்தனித்தாள். இதைக் கண்டு கிருஷ்ணதேவர் அப்பாஜி யின் யோசனையின்மேல் அவளைப் புறக்கணித்து அவு ளுக்கு வேண்டிய செல்வத்தையும் கொடுத்தனுப்பி விட்டார். 0 நூல் : இந்திய பூபதிகள் சரிதை 1930) பக்கம்- 35, 43. நூலாசிரியர் : T. W. கணேசன், B.A., L.T., (சென்னை, பச்ச்ை யப்பன் கல்லூரிப் பள்ளிக் கூடச் சரித்திர ஆசிரியர்) - - வெ-9