பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 ஆயிரம் மணிக்குடங்களைத் தானமளிக்கச் செய்ததல் லால் இவள் பெற்ற நன்மை:ஏதுமில்லை. புனிதமான தெய்வ காரியங்களிலும் இடையூறு விளைத்து இன்னாதன செய்யும் இப்புலனடக்கமில்லாப் பேதை இது போழ்தும் ஒரு வஞ்சகம் நெஞ்சகத்தில் வளர்த்தனள். இவள் நடிக்கும் நாடகம் இனிது நிறைவேறு தற்கு அரசரின் அன்பையும் அறிவையும் அறவே கவர முற்படு வது முதன்மையான பாகமாதலின் பண்டை வினைப் பயனால் வந்தடுத்த கிருமி நோயை அவள் தீர்த்து விடுவ தாக உறுதி கூறி அரசரை இணங்க வைத்தாள். இனி இந்நோயில் வருந்துபவர் வேறு எங்கேனும் உளரோ வென்றறிய ஒற்றரை யேவிப் புலன் விசாரிக்கு மளவில் கிருமி நோயால் மெலிந்து நலிந்த வற்றிய தோலும் வெற்றுயிராக்கையுமுடைய ஒர் இடையனை மருந்து தருவதாக இதங்கூறி அரசியிடம் அழைத்து வந்தனர். ஈரமில்லா நெஞ்சத்தாள் அவனைத் தனியிடத்துக் கூட் டிச்சென்று வல்லுயிர் நீக்கி வயிற்றைக் கீறி குடரைத் துருவி ஆராயவும், நோய்க்குக் காரணமான பெருங் கிருமியொன்றைக் கண்டனள். அதைக் கொல்லக் கருதி மருத்துகள் பல இட்டுப் பார்த்தனள். நன்மையில்லை, இறுதியாக வெண்காயம் கொடுக்க இறந்தது. சவச் சோதனையால் உரிய மருந்தின் உண்மையறிந்த மதி நுட்பமுடைய மடரவில் உடல் பூரித்தனள். தூவுணா வாகாத வெண்காயத்தை உடலையோம்ப ஒருபோதுஉட் கொள்ளுவதில் தீமையில்லையென்று அரசரைத் தேற்று வித்து உண்ணுமாறு செய்து ஊணுாறக்கமின்றிக் கண்ணி மைப் போல் காத்துக் குணமாக்கினாள். எதிர் பாராத இப்பேருதவியால் உலப்பிலா ஆனந்த முற்ற அரசர் அவளை மகிழ்விக்கத் துணிந்து அவ