பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வரிழைத்த நன்மைக் கீடாக விரும்புவதை விளம்புமாறு வினவினர். நெஞ்சில் நஞ்சும் நாவில் நறவும் வைகும் பண்பினளான பைந்தொடியாள் பணிவு தோன்றப் பரவி, இராச்சிய காரியங்களைத் தன் விருப்பம் போல் ஏழு நாட்கள் வரை நிருவகிக்க அருளுமாறு கொஞ்சும். மொழியால் கெஞ்சினள். வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப் பெற்றது. மாசற்ற மனத்தினரிடத்து இல்லாத குற்றங்களைக் கற்பித்துப் புறங்கூறி அவர்கள் துன்புற இன்பம் நுகர்வ தாக நினைந்து நஞ்சைச் சுவைக்கும் கொடுமனக் கயவ ரில் தலைசிறந்த திஷ்யரஷிதை இறுமாந்து கருமமே. கண்ணாயினாள். தட்சசிலை அரசப்பிரதிநிதியின் அமைச்சர்களுக்குத் திருமுக மொன்றைத் துரிதமாகச் சிருட்டித்தார். கட்டளை நிறை வேறு தற்கு அரசர் பல் முத்திரை தேவையாதலின் அவர் ஆழ்ந்து உறங்கும் வரைப் பொறுத்திருந்து அரக்கிட்ட திருமுகத்தில் கரவாகப் பற்களைப் பதிய வைத்து அக்கணமே தூதுவனிடம் கொடுத்து கடிய வேகமாகத் தட்சசிலைக்குப் போமாறுப் பணித்தனள். 0 நூல்: அசோகன் இழந்த அருந்தனம், (1940) பக்கம்: 24, 25, 26, 27, 28, 29. நூலாசிரியர்: வரத. வீரப்பன் ராபர்ட் க்ளைவின் சூழ்ச்சி அக்காலத்தில் அமீர்சந்த் என்பவன் தான் செய்த உதவிகளுக்குத் திருப்திகரமான நன்றியறிதலைக் காட்டும்படி ஆங்கிலேயர்களை வற்புறுத்தினான். நவாப்