பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 ஸ்-ராஜ் தெளலாவை ஒழித்த பிறகு ஆங்கிலேயர்கள் பெறும் எவ்விதவருவாயிலும் தனக்கு நூற்றுக்கைந்து " கம்மிஷன்' வேண்டுமென்றும் விலையுயர்ந்த கற்கள். முத்துக்கள், முதலியவைகளிலும் பங்குகள் தேவையென் றும் அவைகள் மீர்ஜாபர் உடன் படிக்கையில் காணப்பட வேண்டுமென்றும் கேட்டான். அவைகள் அளவுக்கு மிஞ்சியவை என்றும் அவ்வளவு பேராசை பிடித்த அயோக்கியனை நல்வழிக்குத் திருப்புவது அசாத்திய மென்றும் தம் காரியம் முடியவேணடிய தவசியமென்றும் கருதிய க்ளைவ் ஒரு சூழ்ச்சியைச் செய்யத் தீர்மானித்து விட்டான். அஃதாவது இரண்டு தஸ்தாவேஜ்களை உண்டாக்க வேண்டியது. ஒன்றில் அமீர்சந்த் இஷ்டம் போல் உடன்படிக்கை காணப்பட வேண்டியது. மற். றொன்றில் அது மாத்திரம் நீக்கி விடப்பட வேண்டியது. முதலாவது சிவந்த காகிதத்தில் இருக்க வேண்டும், மற்றொன்று சாதாரணமாய் வெள்ளைக் காகிதத்தில் இருக்கவேண்டும். இவைகளைக்கேட்ட கப்பற்படை யோன் வாட்ஸன், தான் அப்படிப்பட்ட ஒரு வஞ்ச, னைக்கு உடைந்தையாயிருக்கத் தயாராயில்லை என்ற தனால் அவன் கையெழுத்தைத்தானே "போர்ஜரி' (Forgery) செய்யத்தயாராய்விட்டான். அப்படியே அந்த தஸ்தாவேஜ் அமீருக்குக் காட்டப் பட்டது. வாட்ஸ் என்பவன். இரண்டாவது தஸ்தாவேஜ் எடுத்துக்கொண்டு கோஷா ஸ்திரீகள் பிரயாணஞ்செய் யும் டோலியில் ஏறிக்கொண்டு நள்ளிரவில் (1757 ஜூன் 4) மீர்ஜாபர் கையெழுத்தைப் பெற்றான். 0 நூல்: பரதகண்டம் (1926) பக்கம் 227. 228 நூலாசிரியர்கள்: வை. சூரியநாராயண சாஸ்திரி, M. A. L. T. -