பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வாரன் ஹேஸ்டிங்ஸ் பரதகண்டத்தில் ஆங்கிலேயர்களுடைய ஆட்சியைச் சீர்திருத்தஞ் செய்யத் தக்கவன் வாரன் ஹேஸ்டிங்ஸ் (W. Hastings) என்பவன் தான் என்று திர்மானஞ் செய்யப்பட்டது. அந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772 இல் ஏப்பிரல் மாதத்தில் கவர்னர் பதவியையடைவதற்குமுன் கீழ்ந்தியா வர்த்தக சங்கத்தில் குமாஸ்தா முதல் பல உத்தியோகங்களில் அனுபவம் பெற்றவனாதலால் அவனைப்-பழைய பெருச்சாளி எனக் கூறுவது உலக வழக்குக்குரியமுறையாகும். 1769ல்-இங்கிலாந்திலிருந்து கப்பலில் யாத்கரை செய்யும்போழுது அவன் வியாதி யினால் பீடிக்கப்பட்ட காலத்தில் அவனுடன் கூட பிரயாணஞ்செய்த ஒருவன் சகாயஞ் செய்தான். அத்தகைய ஒருவன் மனைவி தாய் எனக் கருதப்பட வேண்டுமன்றோ! ஆனால் அவளை விவாகஞ் செய்து கொள்வதற்கு வேண்டிய சூழ்ச்சிகளை நிறைவேற்றி னான். ஐந்து வருஷங்களுக்குள் மேலே குறிப்பிடப்பட்ட *உபகாரியின் மனைவி, கல்கத்தாவில் நவாப்மனைவியாய் விளங்கினாள். அவள் சொந்தப் புருஷனை விட்டு நீங்கு வதற்கான பாரிஸில் நடந்த விவாக விலக்கு விவகாரச் செலவுகளெல்லாம் ஹேஸ்டிங்ஸினுடையது. 0 நூல்: நமது பரதகண்டம்(1926) பக்கம், 265 க265 நூலாசிரியர்: வை. சூரியநாராயண சாஸ்திரி, M. A., L. T., யூதாஸ் ஆதாஸ் இவன் இயேசுவின் பன்னிரண்டு மாண வர்களுள் ஒருவன். இவன் தன் குருவின் சத்துருக்களிடம் முப்பது வெள்ளிக்காசுகள் வாங்கிக்கொண்டு அவரைக் காட்டிக் கொடுத்த பாதகன். . . 0 நால்; தன்னம்பிக்கை-பக்கம் 77