பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமானுக்கு வாலுண்டா? இராமாயணத்தில் காணப்படும் வாலி, சுக்கிரிபன். அனுமான் வகையராக்கள், சரித்திர ஆராய்ச்சிக் காரர் கண்டிருக்கிறபடி இவர்கள் கொடி பற்றி வந்தபேர் என் பதாகவும் இக் குலத்தவர் கிறிஸ்துவுக்குப்பின் இருந்த தாகவும் இவர்கள்தான் கடம்பவன அரசரென்றும் வான ரரென்றும் வழங்கப்பட்டவர்கள் இவர்களே என் றும் கண்டிருக்கிறார்கள். டாக்டர் மக்ளின் துரை எழுதிய சென்னை அரசாட்சி புஸ்தகம் 1-வது வாலியம் 136&. 137 பக்கம் வரை கண்டிருப்பதும் இவ்விஷயமாகவே. கிட்கிந்தாபுரி கடம்பவன முதல் அரசன், வாலி, சுக்கிர பன். இவர்கள் மந்திரி ஆஞ்சநேயர் என்ற அனுமான் அவருக்கு மற்றோர் பேர் நவக்கியாகரண பண்டிதர். இவர் மஹா பெலவான். இவர்கள் சேனைத் தலைவன் நளன். இவர்கள் படை அல்லது தளம் கூட்டம் கூட்ட மாக விருக்கும், இவர்கள் கட்டும் உடை பயில்வான்கள் கட்டும் வால் லங்கோடுகள். இவர்கள் ஜிதேந்திரியர்