பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மனோவலிமையுடைய போன்றவர்கள். எதற்கும் பின்ன டையா பலாட்டியர், பிடிவாதக்காரர். மற்கடக சம்பிர தாயப்படி வானரர் என்று அழைக்கப்பட்டார்கள் என்ப தாகக் கண்டிருக்கிறார்கள். சோழவர் மரபு வாலிவகை யரா விலங்கினமான குரங்கு வகையராவென்பது பொருந் தாத வசனம். வானவர் என்பது வான்தேவகரர் மனுஷர் தேவமனுஷர் என்று பொருள் படும்படியான மறை பொருளான அக்கால வார்த்தையாகும். இவ்வார்த்தை பின்வழக்கத்துக்கு வந்ததென்பது நிச்சயம். 0 நூல்: அகம்படியர் மரபு விருத்தாந்தம் மூவரசர் குல விளக்கம் (1927), பக்கம்: 32, 23, 24, நூலாசிரியர் : தொண்ட மானார் குருமூர்த்தி. அசோகன் அசோகருடைய கொடுந் தன்மையைப்பற்றி இன் னும் அநேக கதைகள் சொல்லுவார்கள். அவருடைய ராஜ்ய பாலனத்தில், அற்பமான தப்பிதம் செய்தவர் களுக்குங்கூட குடுரமான தண்டனை விதிக்கப் பட்டது. என்பார்கள். அதனால், அபராதம் செய்தவர்கள் தப் பில் பிழைப்பது அரிதாயிருந்தது. அவருக்குப் பிரியமான வர்களும் அவரிடத்துத் தப்பிதம் செய்து பிழைத்த தில்லை. ஒரு நாள் அந்தப்புரத்திலுள்ள ஸ்திரீகள் தத்தம் சுகதுக்கங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் அசோகருடைய விகார ரூபத்தைப் பற்றியும் பேசினார்களாம். அவர்கள் அப்படி வம்பளத்த செய்தி தெரிந்து அசோகர் அந்த ஸ்திரீகளை வெளியில் இழுத்துக் கொண்டு வரும்படியாகக் கட்டளை