பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏豹兹 உடன்பாடு பெற்று பலியிட்டால் புதையலை உமக்கு அளிப்பேனென்று ஆவேசமுகமாக வந்து சொல்லிற் றென்றும், அரசர் அரண்மனை மீண்ட பின்னர் அப் புதையலை எடுத்தலைப்பற்றிய கவலையோடிருப்ப அதனை அறிந்த முத்தாம்பாள் என்னும் தாசி கர்ப்பவதி யாகிய தன்னை அவ்வாறு பலியிடலாமெனவும் அப் புதையலாற் பெற்ற தொகையைக்கொண்டு முப்பத்தி இரண்டு அறங்களையுஞ் செய்விக்க வேண்டுமெனவும் தான் அதுகாறும் அனுபவித்த உலக இன்பங்கள் போது மெனவும் தன் உயிர் போயினும் ஏழைகள் இன்பம் பெறுதல் தன் கருத்தெனவும் கூறினாளென்றும், அரசர் அவ்வாறே அவளைப் பலியிட்டு புதையலைப் பெற்று அவள் பெயரால் அறங்களை நடத்தினாரென்றும் கூறப் படும் வரலாறொன்று கர்ண பரம்பரைச் செய்தியாக வழங்குகிறது. 0 நூல் : சிவக்கொழுந்து தேசிகர் பிரபந் தங்கள் (1939); பக்கம் - 287, குறிப்புரை எழுதியவர் : டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். குலோத்துங்க சோழ மகன் கம்பருக்குக் காவிரியெனப் பெயருள்ள ஒரு குமரி -யிருந்தனள். அவளைச் சோழன் மகன் விரும்ப அவள் கற்புக் கெடுவதினும் உயிர் நீங்கல் நன்றெனக் கம்புக் குதிரில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டனள். 0 நூல்: அபிதான சிந்தாமணி (1910) பக்கம் 218. நூலாசிரியர்: ஆ. சிங்காரவேலு முதலியார். * , 3