பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63 சில தோணிகளை முழுகடித்து: அகப்பட்ட நிற்பாக்கிய ரிற் சிலரைத் தப்ப விட்டார்கள். e நூல் : இந்துஸ்தானிச் சரித்திரம் (1830), பக்கம்- 19,20, 21 மொழிபெயர்ப்பாளர் IP. ஞானப்பிரகாச முதலியார். சரபோஜி மகாராஜா (1777-1832) (முத்தாம்பாள் சத்திரம்-ஒரத்தகாடு) தஞ்சைச் சரபோஜி மன்னருக்கு முத்தாம்பாள் என்ற ஒரு காமக் கிழத்தி இருந்தாள். அவள் இரண்டு பிள்ளை களை வைத்து விட்டு இறந்தனள். அவள்பால் மிக்க அன்புடைய இம்மன்னர் அவள் பெயரால் சத்திரம் முத லிய தருமங்களைச் செய்தார். அச்சத்திரம் முத்தாம் பாள் சத்திரம் (ஒரத்த நாடு) எனப்படும். சரபோஜி மன்னர் மருந்துகளுக்குப் பயன்பட ஒரு கஞ்சாத் தோட்டம் வைத்திருந்தாரென்றும் ஒரு நாள் அத்தோட்டத்தில் இவர் உலாவி வருகையில் ஒரு சிமிழ் அங்கே கிடப்ப அதனை எடுத்துப் பார்த்தனரென்றும். அதனுள் ஒரு வகை மை இருப்பதைக் கண்டு எடுத்துக் கண்ணில் இட்டுக் கொண்ட பொழுது ஒரிடத்திலிருந்த புதையலொன்று இவர் கண்ணுக்குப் புலப்பட்டதென்றும் ஒருநாள் ஒரத்தநாட்டுப் பக்கத்திலிருந்தகாட்டிற்குவேட் டையாட ச் சென்றபொழுது அக்காட்டில் அந்த மையைக் கண்ணிலிட்டுப் பார்த்தாரென்றும், அப்பொழுது ஒரிடத் தில் மிக்க புதையல் இருப்பதை அறிந்துகொள்ளுதற்கு முயல அதனைக் காத்திருத்த பூதமொன்று துன்புறுத்திற் றென்றும் பின்பு அப்பூதத்தை வழிபட்டுக் கேட்க அது கர்ப்பமுடைய பெண்ணொருத்தியை அவளுடைய