பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 70 யார்க்குப் பக்குவம் வருவிக்கும் நிமித்தம் கட்டளை யிடவே, இதுவரையும் நேரில் பழகாதிருந்த தொழுவூர். வேலாயுத முதலியார் அன்று முதல் அடிமை பூண்டு இலக்கண இலக்கிய சித்தாந்த நுண்பொருளும் வட மொழி நூல்களும் ஓதி உணர்ந்து கற்றுத்துறை போய நாவலரேறாக விளங்கினர். 0 நூல் : திருவருட்பா (1924), இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள், பக்கம் - 8 குறிப்புரைகள் எழுதியவர்: காரணப்பட்டு ச. மு. கந்தசாமி பிள்ளை. பாரதியார் (1882 - 1921) எட்டயபுரம் சமஸ்தானாதிபதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதனால் பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம் பினார். கிளம்பி மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டித ஊழியம் புரிந்தார். அது 1904-ம் வருஷத்திய நிகழ்ச்சி. அப்பொழுது பாரதியார் ஒரு நூல் இயற்றினார். அதற்கு "மூடசிகாமணிகள் நகrத்திர மாலை' என்று பெயர்: நக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல் லவா? அதே மாதிரி இருபத்தேழு விருத்தப்பாக்களாக அந்நூலை எழுதினார்; அதிலே சிலரது பெயரைக் குறிப் பிட்டே திட்டிப் பாடியிருந்தார். மதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய பல புலவர் களிடம் அவர் அந்த நகrத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங்கப்பா என்பவர் ஒரு கிழப்