பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தேவதாசிகள் ஏழாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய "தேவதாசி முறையானது முதலாம் இராசராசரால் நிலைநாட்டப் பெற்றது. அக்காலத்தில் தக்காணத் திலுள்ள கோவில்களிலும் அம்முறையைக் கையாண் டனர். அப்பொழுதிருந்த வேதாசிகள் நாட்டிய இசைக் கலைகளில் தேர்ச்சியுற்றவர்களாகவும், பக்தியில் முதிர்ந்தவர்களாகவும் திகழ்ந்தனர். சிலர் மன்னர் களோடும் நெருங்கிப் பழகினர். ஆயினும் அவர்கள் கூட்டம் முழுவதையும் தாக்கியதாழ்வுநிலை பிற்காலத்தே ஏற்பட்டது. - பல்லவர் காலத்திலே தேவதாசிகள் சில கோவில் களில் அமைக்கப்பட்டனர், ஆனால் இராசராசர்தான் அந்த வழக்கத்திற்குப் பெரும் ஊக்கமளித்தவர். 0 நூல்: தென் இந்திய வரலாறு(?) பக்கம்-198 சன்மார்க்க பாடசாலை வள்ளலார் வடலூரில் சன்மார்க்கபாடசாலை ஒன்று நிறுவி, அப்பாட சாலைக்குத் தொழுவூர்-வேலாயுத முதலியாரை உபாத்தியாயராக அழைத்துத் திருக்குறள் ப்ர்டம் நடத்துவிக்கக் கட்டளையிட்டனர். மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரமும் நடவாமையால் வாசிப்போர்கள் வள்ளலாரிடம் குறைகூற, மூட முண்ட வித்வானைக் கூப்பிடும்' என்று கூற, முதலியார் வந்து வாய்புதைத்துப் பின்புறத்தே கைகட்டித் தூசு ஒதுக்கிநிற்க வள்ளார் 'பிச்சு மூன்று மாத்மாகியும் மூன்று அதிகாரந்தானும் நடக்கவில்லையாம்; பாட சாலை வேண்டாம். வித்துவான்களே! உங்களுக்குத் தானாகவே கல்விவரும்; என்று கூறிப் பாடசாலையை நிறுத்திவிட்டனர். 0 சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சரிதம் (1956) பக்கம்-58 நூலாசிரியர்: காஞ்சி புரம் த. வடிவேல்,