பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 அவர்களுக்கு அவைகளின் பொருள் தெரியாது. அவை களை எழுதினவர்கள் நம் தமிழர்களாகிய திராவிடர் களே. இவர்கள்தான் அநேக ஆயிரம் வருஷங்களுக்கு முன்பிருந்தே, நாகரீகம், மதம், முதலியவற்றில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். தென்குமரி கடல் கொண்டு போனபோது, வடஇந்தியா என்னும் பாகம் சமுத்திரத் திலிருந்து வெளித்தோன்றி நாடாயின போது, சுற்றுப் பக்கங்களிலிருந்த மனிதர்கள் அந்த நாட்டில் குடியேறி னார்கள். மேற்கிலிருந்து பாரசீகரும், வடமேற்கிலி ருந்து ஆரியர்களும், தெற்கிலிருந்து திராவிடர்களும் அங்கு போய்க் குடியேறினார்கள். ஆரியர்களப்போது நாகரீகமில்லாதவர்களாய், காட்டுமிராண்டிகளாய் ஆடுமாடு மேய்த்துப் பிழைப்பவர்களாய் வந்தார் களென்று தெரிந்த விஷயமே. எல்லாவற்றிலுமுன்னணியி லிருந்த நம் திராவிடர்களாகிய தமிழர்கள் முதலில் அவர்கள் வடமொழியைச் சுலபத்தில் கற்றுக் கொண்டு நம் மதத்திலுள்ள சில உண்மைகளை அவர்கள் மொழி யில், அவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு வடமொழி யில் வேதமொன்று முதலில் எழுதினார்கள். பிறகு அதை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு தங்களுடைய தென்று உரிமை கொண்டாட வந்தார்கள். அவர்களுக்காக அந் நூல்கள் எழுதப்பட்டவையே யாகையால், அதிலும் மேலான கொள்கையுடையது நம் தமிழ் நூல்களிலிருப்ப தால், நம் தமிழர் அதைப்பற்றிச் சிந்திக்கவேயில்லை. 0 நூல்: தமிழர் (திராவிடர்) மதச் சுருக்கம் (1943) நூலாசிரியர்: திருச்சி-தென்னுார் தி. அர. நடேசன் பிள்ளை.