பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18,

குமாரன் உண்டென்று அசோகாவதானம் என்னும் நூலில் எழுதப்பட்டிருக்கின்றது. அப்படியே மெளரிய சம்ராட் என்னும் நூலிலும் எழுதப்பட்டிருக்கின்றது.

குநாலப் பறவையின் கண்ணைப்போல் பிரகாசமாக வும், கறுப்பாகவும் அவனுடைய கண்கள் இருந்ததனால், அவனுக்குக் குநாலன் எனப் பெயரிட்டார்கள். அவன் காஞ்சனமாலை என்னுங் கன்னிகையை மணம்புரிந்து கொண்டான். ஆயினும், சிறுபிராயத்திலிருந்து தந்தை யின் நல்லுபதேசங்களைப் பெற்று வளர்ந்து வந்திருந் தமையின், அவன் நாளடைவில் விரக்தனாயினான். எப் பொழுதும் தியான தாரணங்களிலும், தர்ம விசாரங் களிலுங் காலத்தைக் கழித்து வந்தான். அவனுடைய சிறிய தாயாகிய திஷ்யரகசியதை என்பவள் அவனுடைய செளந்தரியாதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவன் மீது மோகங்கொண்டாள். தன்னுடைய விருப்பத்தை ஈடேற்றிக் கொள்வதற்காக அவள் பலவிதமான பிரயத் தனங்கள் செய்தாள். அவளுடைய துஷ்ட புத்தியை மாற்ற எண்ணி மகா புருஷனாயும். நல்ல தர்மசீலனாயும் இருந்த குநாலன் தன்னிட்த்தில் வரும் த்ாதிகளின் மூல மாக எத்தனையோ நற்போதனைகளை அவளுக்குச் செய்தான். இழிகுணமுள்ளவர்களுக்கு நல்லுபதேச

. °愈

தrசிலைக்கு அவனைச் சுபேதாராக அனுப்புவித்தாள். சிலநாள் கழிந்த பின்னர் அவள் கணவனோடு விநோதமாகப் பேசிக்கொண்டிருந்து, ராஜ முத்திரை யைத் தந்திரமாகக் கைக்கொண்டாள். அந்த முத் திரையை உபயோ சித்து.'குநாலனுடைய கண்கள் இரண் டையும் பிடுங்கி, அவனைத் தக#சிலையினின்று துரத்தி விட வேண்டும்: என்று கடிதம் எழுதித் தகrசிலையி அள்ள அதிகாரி ஒருவனுக்கு அனுப்பினாள். .