பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

இவள் கற்பையே தனக்கு அணியாகக்கொண்ட உயர்குலத் தமிழ்நாட்டு மாதர்களுள் ஒருத்தியாய் மரு. அம்ம குலத்தில் வந்தவளாயினும், உலகிற்குத் தான் ஓர் 'சி'உன்மாயிருந்து கற்பின்வழி நின்று கண்ணியமுற வேண்டி அரசபதவி வாய்க்கப்பெற்றவளாயினும், ஊழ் வினை வலியாலோ, அல்லது வேறெதனாலோ, தாமரை யிலைத் தண்ணிர்போல் உலகவாழ்க்கையிற் பற்றியும் பற்றில்லாதிருந்த தாயுமானவர்மீது மனம் பற்றினாள்.

தன் கணவன் உள்ளபொழுதே அவரைப் பன்முறை. யும் பார்த்துள்ளாள். அவர் உருவழகைப் பற்றிப் பிறர் உரைப்பப் பன்முறையும் கேட்டுள்ளாள். அக்காலத் தெல்லாம் தன் கணவனுக்கஞ்சி அமைந்திருந்தாள் போலும். இப்பொழுதோ, தானே தனியரசு வகித்தமை. "ால் அச்சம் அறவொழித்து, திண்டா நெருப்பனைய. தாயுமானவரை நெருங்கித் தன் திவாய் திறந்து ஐய! என்உடல் பொருள் ஆவி முன்றையும் தங்களுக்கே தத்தம். செய்துவிட்டேன். என் இராஜ்யத்திற்குத் தாங்களே தலைமை வகிக்க வேண்டும்' என்றனள். இக்சொற்கள் தாயுமானவர் காதில் காய்ச்சிய நாராசம்போல் விழுந்: தன. அவள் தீய எண்ணத்தை அவர் அறிந்துகொண் டார். அவர், அவள் தீய எண்ணத்திற்குத் துக்கித்து அவளுக்கு ஏற்ற புத்திமதிகளைக் கூறிவிட்டு. இனி இங்கிருப்பது தகாதென்று நீங்கி தேவை நகரிற் சென்று வசித்துவந்தனர். -

0 நூல் : ரீமத் தாயுமான சுவாமிகள் சரித்.

திரம் பக்கம் - 8,9. -

ராணி திஷ்யரகூரியதை

அசோகருக்குக் குமாரர்கள் அநேகர் இருந்தார் களென்று அவருடைய சிலா சாசனங்களினால் தெரிய வருகின்றது. அசோகருக்கு குநாலன் என்னும் ஒரு.