பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 "ஒரு எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவள் மும் தாஜ் பீகம். ஆனால் எழில் நலம் வாய்ந்தவள். உல்லாஸ் நடையுடை பாவனைகளை உடையவள். அதனால் மஹாராஜா மோகங்கொண்டவராய்த் தமது அரண் மனை அந்தப்புரத்தில் அவளுக்கு முதன்மையான இடங் கொடுத்தார். அவளுக்கு எது தேவையானாலும் சரி, அதன் விலையைப் பற்றிக் கவலையில்லை. உடனே வர வழைத்துக் கொடுத்துவிடுவார். 1921-ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மஹாராஜா இங்கி லாந்துக்குப் புறப்பட்டபோது மும்தாஜ்பீகத்தையும் அழைத்துக் கொண்டு சென்றார். கமலாபாய் என்னும் மாறு பெயருடன் விவகரிக்கச் செய்தார்......மும்தாஜ் இங்கிலாந்துக்குப் போய்விட்டு வந்த பிறகு ஒரு ஆண்டில் கர்ப்பவதியானாள். . அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பிறந்த போது குழந்தை உயிருடன் நன்றாகவே இருந்தது. ஆனால் சிறிது நேரத்திற்குள் தாதிகள் அக்குழந்தை இறந்து விட்டது என்று தெரிவித்தார்கள். இதனால் மும்தாஜ் பீகத்தின்மனம் முறிந்து விட்டது. மஹாராஜா வின் சம்பந்தத்தை எப்படியேனும் அறுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டாள். 0 நூல்: லீலா விநோத சமஸ்தானங்கள் (1939) பக்கம் 46, 47, 48. நூலாசிரியர் : லி. ரா. கோபி சந்தராஜன் கோபி சந்தராஜன்- உத்தர கண்டத்தில் கெளட பங்கால் என்னும் ராஜ்யத்திலுள்ள காஞ்சன புரிக்கு அரச னாகிய திரிலோசந்து என்பவன் ஒருவன் இருந்தான். அவன் பாரி மைனாவதி. அவன் தவத்தால் பிறந்த குமரன் கோபிசந்தன். இந்தக் கோபிசந்தன் தந்தைக்குப்