பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.5 பிறகு பட்டமேற்று அரசாளுங் காலத்தில் ஆயிரத்து இரு நூறு மனைவிகளை விவாகஞ் செய்தும் ஆயிரத்து அறுநூறு போகமாதர்களை வைத்துக் கொண்டும் விஷயானந்தத்தை அனுபவித்து வந்தான். - ஒர் நாள் தனது புதல்வன் சந்தன முதலிய வாசனைத் திரவியங்களை அணிந்து உலாவிக் கொண்டிருத்தலைக் கண்டு இவ்வகைக் களிப்புடன் இருக்குமிவன் யமன்கை யில் பட்டு மாள்வனே என்னும் வருத்தத்தால் மேல்மாளி கையினின்றும் அழுங்கண்ணிரானது இவன் மேல் துளிப்ப இந்நீர் யார் தெளித்தாரென்று மேலே பார்க்க அது தனது தாயின் கண்ணிரென்றறிந்து இவளை யழுதற்குக் காரணமென்னவென்று கேட்க 'உன் தந்தை முதலிய முன்னோர் உன்னைப்போலவே போகங்களை அனுப வித்து யமன் கையிற்பட்டு மாண்டனர். அவ்வாறே நீயும் யமன் கைப்பட்டு மாள்வாயென்று வருந்தி அழுகின்றேன் என்றனள். 0 நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம்-321, 322. நூலாசிரியர் : ஆ. சிங்காரவேலு முதலியார். கைக்கோ பாட் கீராவின் மகனாகிய கைக்கோ பாட் 1286 வருடத்தில் தன் பாட்டனுக்குப் பின்பு பட்டத்துக்கு வந்தான். இவன் தனக்குத் தோழனாக அயோக்கியனான நைஜாமுட்டீன் என்பவனைத் தெரிந்து கொண்டு அவன் வசத்தில் இராச் சிய பாரத்தை ஒப்பித்துவிட்டுச் சிற்றின்ப லீலைகளில் தன் நாட்களைச் செலவழித்தான். அவனுடைய தகப்பன் வங்காளத்திலிருந்து திரும்பின போது, பல முறை கடிந்து கொண்டும் அவன் தன் துஷ்டக் கிரியைகளை விடவில்லை. கடைசியில் அவனுடைய தேகத்தில் சகல வியாதியுங் குடிகொண்டு பெலன்குன்றி அவனுடைய வெ-2