பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ரஞ்சித் சிங் (1780-1889) சிறு குழந்தையாக விருக்கும்பொழுதே தம் பஞ்சாப் சிங்கமாகிய இரஞ்சித் சிங்கருக்குக் கன்ஹயா வம்சத்தில் தோன்றிய குருபக்ஷ சிங்கனுடைய குமாரி மாதாப் கூர் என்னும் பெண்ணை விவாகம் செய்து வைத்தனர். இற்றைக்கும் பாலிய விவாகம் நடந்தேறும் நமது தேசத் தில் அப்பொழுது நடந்தது ஆச்சரியமன்று. இரஞ்சித் சிங்க மகாராஜாவிற்கு மாதாப்கூரைத் தவிர அனேக மனைவியர் உண்டு. ஆனால், மாதாப்கூரே பட்ட மகிஷியாக விருந்தாள். அவளுக்கடுத்தாற்போல் இராமசிங்கன் என்னும் ஒரு சிற்றரசனுடைய புதல்வி யாகிய இராஜ்கூர் என்னும் சீமாட்டியை அவர் மணம் புரிந்திருந்தார். அவள் காரக் சிங்கன் என்னும் புதல் வனைப் பெற்றாள். அவன் ஒருவனே இரஞ்சித் சிங்க ருடைய உண்மைப் புத்திரன் எனச் சொல்லப் படுகின்றது. மற்றும் இரஞ்சித் சிங்கர், குல் பீகம் என்னும் தாசி யையும், மோரான் என்னும் தாசியையும் மணந்திருந்தார். மோரான் சிறிது காலம் மிக்க அதிகாரம் பெற்றிருந் தாள். மகாராஜா கூட அவளால் பதுமைபோல;ஆட்டப் பட்டார். அவருடைய அந்திய காலத்தில் ஜிண்டான் என்னும் ஒரு பெண்ணை மணந்தார். அவள் சீக்கிய சேனையின் தளகர்த்தனுடைய குமாரி யென்றும் நாட்டியத்தில் தேர்ந்தவளென்றும், அரசர் ஒரு சமயம் அவளைப் பார்க்க நேரிட்டதென்றும், உடனே அவளை அவர் மணந்தாரென்றும் சொல்லப்படுகின்றது. 0 நூல்: வீர மன்னர்கள் (1930) பக்கம்- 63, 66, 67, நூலாசிரியர் : T. W. கணேசன், பி.ஏ., எல். டி. (சரித்திராசிரியர், பச்சையப் பன் உயர்தரக் கலா சாலை, சென்னை)