பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மகியா, சாந்தகுமாரி என்ற மூன்று வேசிகளையும் வைத்துக் கொண்டார்! e நூல் : லீலா விநோத சமஸ்தானங்கள் (1939), பக்கம், 56, 57, 58, 59 . நூலாசிரியர் : வி. ரா. லக்கா மீவாரநாட்டு ராணாவாகிய லக்கா ரானாவுக்கு விருத். தாப்பியம் வந்து விட்டபடியால், தனது மற்றப் பிள்ளை களையும் பேரன்மார்களையும் தக்க ராஜ்ய பாரங்களில் அமர்த்தி, சண்டனுக்கு முடிசூட்ட இருக்கும்போது, இளவரசனுக்குப் பெண் கொடுப்பதாக மாண்டார நாட்டரசனிடமிருந்து மங்களகரமாய் ஒரு தேங்காய் வந்தது. சண்டன் அரண்மனை யில்லாமலிருந்ததால் வந்த தூதர்களை லக்கா தானே நேராக வரவேற்றுத் தக்கபடி உபசரித்து 'இருங்கள், இளவரசன் சீக்கிரம் வந்து விடுவான். தாடி நரைத்த என்னைப் போன்ற கிழவனுக்காக அத் தேங்காய் கொண்டுவரப் படவில்லை என்று நம்புகிறேன்” என்று மீசை மீது கை போட்ட வனாய் அவர்களைப் பார்த்துச் சொன்னான். சண்டன் திரும்பி வந்ததும் இதே வார்த்தைகள் உரைக்கப் படவே. தனது தகப்பன் ரஸ்த்திற்காகவாயினும் வினய மில்லாமல் தனக்காக என்று கேட்டதற்கு மனம் வருந்தின வனாய் அத் தேங்காயை ஒப்புக் கொள்ள மாட்டே னென்று ஒரே பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டான். மகனோ ஹடம் பண்ணுகிறான். மாண்டார நாட்டரசனுக்கு அதைத் திருப்பியனுப்புவதும் மரியாதை யன்று. ஆகையால் கிழவர் அத் தேங்காயைத் தானே எடுத்துக் கொண்டு தனக்காகவே அவ்வரனை ஒப்புக் கொண்டார்.