பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 0 நூல்: ராஜபுத்ர வீரர்கள் (1938). நூலா சிரியர் : T. லக்ஷ்மி நாராயண ஐயங்கார்,B.A , வேங்கடதேவ மஹாராயன் வேங்கடதேவ மஹாராயனுடைய புத்திரன் கிருஷ்ண தேவமஹாராயன் 30-வருஷம்; அவன் புத்திரன் வாசு தேவ ம்ஹாராயன் 30-வருஷம்; அவன் புத்திரன் அஸ்வ தேவ மஹாராயன் 25-வருஷம்; அவன் புத்திரன் வேங்கட தேவ மஹாராயன் 28-வருஷம்; அவன் புத்திரன் வாசு தேவ மஹாராயன் 18-வருவும்; அவன் புத்திரன் கிருஷ்ணதேவ மஹாராயன் 24-வருஷம்; அவன் புத்திரன் அஸ்ததேவ மஹாராயன் 28-வருஷம்; அவன் புத்திரன் 38 வருஷம் அவன் புத்திரன் வாசுதேவ மஹா ராயன் 29-வருஷம்: இவ்விதமாக இராய வேலூரை ஆண்டு வந்தனர்கள். பின்பு அவன்சுதனாகிய வேங்கட தேவ மஹாராயன் 29-வருஷம் ஆண்டு வரும்போது நிய மித்திருந்த இலக்கினத்தில் தன் மனைவிக்கு வீட்டு விலக் கம் நேரிட துன்பமுற்று தன் அரண்மனையில் தீபமிடுகிற ஒர்நாயகியைக் கூடிப்புணர்ந்த காலையில் அவள் கருப்பத் தில் ஒர் ஆண் பிள்ளை பிறந்து கிருஷ்ணதேவ மஹாராய னென்னும் பெயர்பூண்டு கல்வி கற்று பட்டாபிஷேக துரந்தரனாகி அரசாண்டு வருகையில் தனது வீட்டு வண்ணானுக்கோர் துருகமும், பாதரrை செய்யுஞ் சக்கி விக்கோர் துருகமும் செய்துகொடுத்ததனால் இப் போதும் இவ்வூருக்குத் தென்றிசையில் வண்ணான் துருக மென்றும், சக்கிலி துருகமென்றும் விளங்க வேலூரை 15-வருஷம் செங்கோல் செலுத்தி வந்தனன். е நூல்: இராயவேலூர் என வழங்கும் வேலை மாநகர் சரிதை (1909) பக்கம் - 40, 41.