பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 தது. ஆழ்வார் ஒரு சிறு குடிசைக்குள் ஒதுங்கி நின்றார். தேவதேவியோ அந்த மழையைக்கூட கவனியாமல் நனைந்து கொண்டே இவர் இருக்கும் குடிசைக்குப் போனாள். இவருக்கு "அவளிடத்தில் மிகவும் இரக்கம் தோன்றி தன் வேஷ்டியினால் அவளைத் துடைத்தார். தேவதேவி செய்த லீலைகளாலும் பாசாங்குகளாலும், இவர்களுக்கு ஸ்நேக ஸம்பந்தம் ஏற்பட்டு விட்டது. ஆழ்வாருக்கு உடனே அதில் ஞாபகம் சென்றது. ஈச்வர .ணுக்குச் செய்து வந்த ஊழியத்தை மறந்து விட்டார். தேவதேவியின் நிழல்போல அவளை ஆழ்வார் பின் தொடர்ந்து கொண்டே சென்றார். அவள் தான் நினைத்த கார்யம் ஆகிவிட்டதென்று எண்ணி, இவரை கவனியாமல் தன் வீட்டுக்குப் போய் இவரை உள்ளே வரர் தபடி வெளியில் துரத்தி விட்டாள். 0 நூல் : ஆழ்வார்கள் சரித்ரம் பக்கம்-95, 96, 97, 98. - பத்மாவதி அம்பாபாலியின் காலத்தில் உஜ்ஜயினியில் பத்மாவதி என்னும் விலைமாது ஒருத்தி இருந்தாள். பிம்பிசாரன் அவளுடன் ஒர் இரவு தங்கினான். என்ன காரணத் தாலோ, அவனால் அவளை உள்ளன்புடன் நேசிக்க முடியவில்லை. ஓர் இரவிலேயே அவளைக் கைவிட்டான். ஆனால் அவள் அவன் கொடுத்த சந்தர்ப்பத்தை நன்றா கப் பயன்படுத்திக் கொண்டாள். தான் கருத்தரித்து விட்டதாகச் சாதித்தாள்; (ஏற்கெனவே அவள் இரண்டு மாதக் கர்ப்பிணி). அவன் அவளுக்கான செலவை ஏற்க வேண்டியதாயிற்று. e இதழ் மஞ்சரி, (ஜூலை-1953) கட்டுரை யாளர் : அட்ஸ் மில்லி.