பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பார்த்ததும் அவளுக்கு அந்த நந்தவனத்தின் புஷ்பங்களை அனுபவிப்பவனைத் தானும் அடைய வேண்டுமென்று மனசில் தீர்மானித்துக் கொண்டாள். பாத்தி கொத்திக் கொண்டிருந்த தொண்டரடிப் பொடி ஆழ்வார் முன்னி லையில் போய் தன்னாலான மட்டிலும் அவரை வசப் படுத்தப் பார்த்தாள். ஒன்றும் முடியவில்லை. அவளுடன் வந்த அவள் தமக்கை, அவர் பக்தர் என்றும் அவரைக் கெடுக்க முயலுவதில் ப்ரயோஜனமில்லை யென்றும், பலவாறு சொல்லியும் தங்கை கேட்கவில்லை. தங் கையை அவள் மனம்போல் விட்டு விட்டு, தோழிமார் களும் தமக்கையும் ஊர் போய் விட்டார்கள். இவள் ஆடை ஆபரணங்களைத் தமக்கையிடம் கொடுத்து அனுப்பி விட்டாள். உடனே ஒரு காவிப் புடவையைத் தறித்துக் கொண்டு மறுபடியும் அவர் முன் னிலையில் போய் விழுந்து விழுந்து நமஸ்காரஞ் செய் தாள். யார் என்று ஆழ்வார் கேட்க, அவள் பின் வரு மாறு கபடமாய் பதில் சொன்னாள். "ஸ்வாமி! என் தாயார் ஒரு வேசி. முன் ஜன்மாவில் செய்த பாபத்தினால் அவளுக்கு நான் பெண்ணாகப் பிறந்தேன். வேசித் தொழிலைச் செய்ய எனக்கு மன மில்லையென்று என் தாயிடம் சொல்ல, அவள் என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாள். நீர் செய்து வரும் செயல்களைக் கேட்டு உமக்கு ஊழியஞ் செய்ய வந்திருக் கிறேன். பாத்தி பிடிக்கிறேன். ஜலம் பாய்ச்சுகிறேன். களை பிடுங்குவேன். பூப் பறிப்பேன். மாலை கட்டு வேன். சொன்ன வேலையைச் செய்து உமக்கு அடிம்ை யாய் இருக்க எனக்கு உத்தரவு வேண்டும்.' இதை எல்லாம் நிஜம் என்று ஆழ்வார் எண்ணி அவளை அங்கேயே இருக்கச் சொன்னார். தான் சாப் பிட்ட மீதத்தை அவளுக்குக் கொடுக்க இருவரும் வேலை யைச் செய்து வந்தார்கள். ஒருநாள் நல்ல மழை பெய்