பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அனைத்தையுங் தந்து மனைவி போலப் பாராட்டி ஆசை கொண்டிருந்தான். இப்படி நடந்த பதினான்கு வருடத்திற். குள் அவன் செல்வமெல்லாம் ஒழிந்துவிட்டமையால் அவ னோடு பிணங்கி நீக்கினாள். 0 நூல் : வைசிய புராணம் மூலமும்-உரையும். (1874) சிலப்பதிகாரம் பெற்ற சருக்கம்பக்கம் 230, 23 1, 23 2. நூலாசிரியர் : சூடாமணிப் புலவர். உரை: கோமளபுரம் இராசகோபால் பிள்ளை. தேவ தேவி திருச்சினாப் பள்ளிக்கு மேற்கே சுமார் ஒரு மைல் தூரத்தில் உறையூர் என்ற ஒரு வைஷ்ணவ ஸ்தலமுண்டு. அதற்கு நிசுளாபுரியென்ற ஒரு பெயருமுண்டு. அதுதான் அந்தக் காலத்தில் சோழ நாட்டின் தலைநகராக விளங் கிற்று. அந்தக் காலத்தில் அரசாண்டு வந்த ஒர் அரசன் ஸ்த்ரீகளைக் கண்டு களிப்பதும், அவர்களுடைய சுகங் களில் ஈடுபட்டு அவர்களுக்கு ஏராளமாய்ப் பணம் கொடுப்பதுமாயிருந்தான். அந்த ஊருக்குப் பக்கத்தில் இரண்டு மைல் தூரத்தில் திருக்கரம்பனூர் என்றும் உத்தமர் கோயில் என்றும் பெயருடன் கூடின ஒரு வைஷ்ணவ ஸ்தலமுண்டு. அங்கே ஒருவரையும் ஈடு சொல்லக்கூடாத அழகுடன் கூடின ஸ்த்ரீ ஒருத்தி இருந் தாள். அவள்தான் தேவதேவி. தேவலோகத்திலுண்டான பெண்களுக்கெல்லாம் தேவியாக விளங்கக் கூடிய அழகு டன் கூடியதால் அவளுக்கு அந்தப்பெயர் உண்டாயிற்று. அவள் அந்த அரசனிடம் போய் அவனைத் தன் வலைக்குள் சிக்கும்படி செய்து, அவனிடமிருந்து வேண் டிய பணத்தை சம்பாதித்துக் கொண்டு, மறுபடியும் ஊருக்குப் போனாள். இந்த நந்தவனத்தின் அழகைப்