பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் மனைவி வீரராகவ முதலியாரென்ற தொண்டை நாட்டு வேளாளத் தமிழ்ப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பிறவியிலேயே கண்ணை இழந்தவர். அவர் யாவரும் வியக்கும்படி, கவிபாடும் திறமை அவருக்கு அமைந் திருந்தது. சைவ சமயத்திற் பற்றுடையவராதலின் பல பிரபந்தங்களை அவர் இயற்றினார். ஒரு நாள் காலையில் அவர் வெளியே புறப்படு கையில் நீராடுதற்காக வெந்நீர் வைத்திருக்கும்படி தம் மனைவியாரிடத்தில் சொல்லிவிட்டுப் போனார். சில நாழிகையளவில் வீட்டுக்குத் திரும்பி வந்தார்: வந்த வுடன் நீராட எண்ணினார், அவர் தேவியார் நீரைக்