பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கொணர்ந்து வைத்தனர். தொட்டுப் பார்க்கையில் அது குடற்றதாக இருந்தது. "இது வெந்நீராக இல்லையே: தண்ணிராக இருக்கிறதே என்று முதலியார் கூறினார். அது கேட்ட அவர் மனைவியார், 'உங்களுடைய சம்பாத்தியத்துக்கு இந்த ஜலம் போதாதோ!' என்று சற்று இகழ்ச்சியுடன் சொன்னார். அவ்வுரை செவியிற் பட்டபோது அக்கவிஞரது உள்ளம் மிக வருந்தியது. "நம் கல்வியின் மதிப்பையறியாது அறிஞர்களால் மதிக் கப்படாத செல்வத்தை நினைத்தன்றோ இவள் நம்மை அவமதிக்கிறாள். இனி இங்கே இராமல் எங்கேனும் சென்று இதுகாறும் பெறாத பெருஞ் செல்வத்தைப் பெற்று வருவோம்' என்று அவர் உறுதி கொண்டார். ஆனால் தம்முடைய கோபத்தை ஒரு சிறிதும் வெளியி டாமல் மறுநாள் மாணாக்கன் ஒருவனை அழைத்துக் கொண்டு வெளியூர் போய் வருவதாக மனைவியாரிடம் சொல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டார். 0 நூல் : லாங்மன்ஸ் செய்யுள் வாசகத் திரட்டு, முதற்பாகம், (1937). பக்கம், 51, 52. ஆசிரியர்கள் டாக்டர் உ.வே. சாமிநாதையர், வித்துவான் R. விசுவ நாதையர். ஜார்ஜ் வீட்டின் மனைவி நியூஜெர்ளி என்ற நகரத்தில் மிஸ்டர் ஜார்ஜ் ஷட் என்பவரின் மனைவி. தன் கணவர் தன் பிரியமில்லாமல், முத்தமிட்டாரென்று கோர்ட்டில் முறைப்பாடு செய் தாள். கோர்ட்டார் அவரை 25 பவுன் அபராதம் போட்டு, நல் நடத்தைக்கு ஜாமீன் வாங்கினார். அதோடு, அவள் பிரியத்தைச் சம்பாதித்தே முத்தமிட வேண்டுமென்றும் உத்தரவு செய்தார். அதன்மேல்