பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.3 துய்ப்ளேக்ஸின் மனைவி அக்காலத்தில் புதுச்சேரிக்குக் கவர்னராயிருந்த துய்ப்ளேக்ஸ் அரசாங்க அதிகாரியாயிருந்தும், புதுச் சேரிக் குடிமக்கள் ஆனந்த ரங்கப் பிள்ளையையே தங் களை ஆள்பவராகக் கருதி வந்தார்கள். அதையறிந்து துய்ப்ளேக்ஸ், ஆனந்த ரங்கப் பிள்ளையை இந்திய மக் களின் தலைவராக நியமனம் செய்து விட்டார். ஆனந்த ரங்கப்பிள்ளை துய்ப்ளேக்ஸிடத்தில் எவ்வளவு அன்பும், நட்புங் கொண்டிருந்தாரோ, அவ்வளவு துய்ப்ளேக் ஸின் மனைவியார்பால் அவர் வெறுப்புக் கொண்டிருந்தார். துய்ப்ளேக்ஸ் மனைவியாரின் குணம் அவருக்கு ஒரு சிறி தும் பிடிக்கவில்லை. பல செயல்கள், முக்கியமாக அரசி யல் சம்பந்தப்பட்டவை அவ்வம்பை யாரால் கேடுற்றன வென்பது தெரிய வருகிறது. துய்ப்ளேக்ஸ் தம் மனைவி யாரின் தீக்குணத்திற்கஞ்சி நடக்க வேண்டியிருந்தது. 'துய்ப்ளேக்ஸ் தம் மனைவியார் முன் மூக்குக் கயிற்றுக்கடங்கிய காளை போல அமைதியாகப் பேசு வார்' என்று ஆனந்தரங்கப் பிள்ளை தம் குறிப்புகளில் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். - ኣ 0 நூல்: ஆனந்தரங்கப் பிள்ளை (1941) பக் கம்-3, 9, 81 நூலாசிரியர்: ரா. தேசிக பிள்ளை. பி. ஏ. பி. எல், புதுச்சேரி. ராணி ஒலாஜா ஒலாஜா இராணியாருக்கும் அவரது கணவனாகிய பங்கெல் என்ற தேசத்தின் ராஜாவுக்கும். ஏற்பட்டிருந்த 'சிவ மனஸ்தாபங்களால் ஒருவரையொருவர் சந்திக்காம லிருந்தது மன்றி அந்த ராஜாவால் விவாக சமயத்தில் அளிக்கப்பட்ட ஆபரணங்களும் அவரால் திருப்பி அனுப் பப்பட்டிருந்தன. அதைக்கண்ட ராஜா கோபங்கொண்டு