பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அனுமதி கேட்டுக் கொண்டுதான் .ே ப. சு வ | ன், சிதாதேவிக்கு அவனைக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே எந்நேரமும் குதிரைப்பந்தய மைதானமே கதி என்று கிடந்தாள். e இதழ்: பாரதம் 10-3-1963 டால்ஸ்டாயின் மனைவி-ஸோன்யா ருவிய ஞானி லியோ டால்ஸ்டாய் உலகப் பிரசித்தி பெற்ற இலக்கிய சிருட்டி கர்த்தா என்பது எல்லோரும் அறிந்ததுதான். அவர் குடும்ப வாழ்க்கை எவ்வளவு துயர் மிகுந்திருந்தது தெரியுமா? சில போக்கிரிகளிடம் அவர்பட்ட தொல்லைகள் போதாதென்று தனது மனைவியிடமும் பட்டபாடு சொல்லமுடியாது! டால்ஸ்டாய் எளிய வாழ்க்கைப் பிரியர். அவர் மனைவியோ ஆடம்பர வாழ்க்கையில் அதிகப் பற்றுடை யவள். அது மட்டுமா? வெறும் தொண தொணப்புக் காரியும் கூட. வில்லம்புகள் போலிருக்கும் அவள் சொல்லம்புகள் எல்லாம். டால்ஸ்டாயை அபினியைத் தின்றோ அல்லது கிணற்றில் விழுந்தோ உயிரை மாய்த்துக் கொள்ளச் சொன்ன உத்தமி அவள் ஒருநாள் அவளது தொந்தி ரவையும் கோபக்கணையையும் பொறுக்க முடியாமல் டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அப்பொழுது கடும்பனிக்காலம். பத்து நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மனைவி அதற்காகச் சிறிதும் கவலைப்படவில்லை. 0 இதழ்-அன்னை, 1959.