பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 | கள். முருகன் பெயரைச் சூட்டியபடியால் கந்தப்பையர் மகிழ்ச்சியடைந்தார். 0 நூல்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1962) பக்கம் - 27.3, 174. நூலாசிரியர் : மயிலை, சீனி.வேங்கடசாமி சீதாதேவி பித்தாபுரம் மகாராஜா மிகவும் நல்லவர். முற்போக் குக் கொள்கையுடையவர், மக்களிடம் நன்மதிப்புப் பெற்றவர். அரசியலில் தீவிரபற்றுடையவர். 1937-ஆம் ஆண்டில் தமிழக அரசியலில் பெரும் பங்கு கொண்டவர். காங்கிரசின் முன்னேற்றப் போக்கு போதாதென்று கருதிய அவர் மக்கள் கட்சி என்ற பெயரால் ஒரு கட்சியை ஏற்படுத்தினார். ராணி சீதாதேவி, அக்காலத்தில் புகழ்பெற்ற சமஸ்தானாதிபதியாக விளங்கிய பித்தாபுரம் மகாராஜா வின் புதல்வி. சீதாதேவி எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகும் இனிய குணவதி அதே சமயத்தில் சோஷியல் நாகரிகம்" என்ற பெயரால் ஆண்களைப்போல் சுருட்டுக் குடிக்கும் பழக்கத்தையும் பெற்றிருந்தாள். பலர் கூடியிருக்கும் பொது இடங்களில் கூட கூசாமல் தொடர்ந்து பல சுருட்டுகளைப் புகைத்துத் தள்ளும் அதிசய நாகரிக மங்கையாக அவள் வளர்ந்திருந்தாள். இந்நிலையில் அவளுக்கும் இன்னொரு குட்டி ஜமீன்தாரின் மகனுக்கும் திருமணம் நடந்தது. அவனோ ஒரு அப்பாவி, கடவுள்பக்திமிக்கவன். மனைவியுடன் ஏதாவது பேச வேண்டுமென்றால் கூட அவளிடம்