பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அரிதினத்தில், ஒர் ஆட்டைக்கொலை செய்து சமைக்கும் படி கூற, இவள் மறுத்துவிட்டாளாம். தன் குழந்தைக்கு விஷங்கொடுத்துக் கொன்றுவிட்டாளாம். e நூல்: அபிதான சிந்தாமணி (1910). பக்கம் 121. நூலாசிரியர் : ஆ. சிங்காரவேலு முதலியார். சரவணப் பெருமாளையரின் மனைவியர் திருத்தணிகை கந்தப்பையர் திருத்தணிகையில் வாழ்ந்திருந்தார். இவர் வீரசைவர். இவர்க்கு இரண்டு மனைவியர் உண்டு. இவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லா மையால் திருத்தணி முருகனை வேண்டிக் கொண்டனர். பிள்ளைப்பேறுண்டாகவில்லை. பிறகு இவ்விரு மனைவி யரும் திருப்பதிப் பெருமாளை வேண்டிக் கொண்டனர். பிறகு இவர்களுக்குப் பிள்ளைப் பேறுண்டாயிற்று. பிள்ளைகளுக்குப் பெயரிடும் போது தணிகைமலை முருகன் பெயரைச் சூட்டக் கந்தப்பையர் விரும்பினார். ஆனால், மனைவியர் அதற்கு இணங்கவில்லை. திருமால் திருவருளால் பிறந்த பிள்ளைகள் ஆதலால் பெருமாள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிடிவாதம் செய்தார் கள். வீரசைவராகிய கந்தப்பையர் என்னசெய்வதென்று சிந்தித்தார். மனைவியரையும் திருப்திப் படுத்தித் தமது சைவக் கொள்கையையும் நிலை நிறுத்தி அப்பிள்ளைகளுக்குச் சரவணப்பெருமாள், விசாகப் பெருமாள் என்று பெயரிட்டார். சரவணன், விசாகன் என்பன முருகனு டைய பெயர்கள். பெருமாள் என்பது சிறப்பாகத் திருமாலுக்குரிய பெயர். ஆனால், அப்பெயர் முருகனுக் கும் வழங்குவது உண்டு. பெருமாள் என்னும் பெயரைச் சூட்டிய படியால் மனைவியர் மகிழ்ச்சியடைந்தார்.