பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அழகுக்கும் நாகரிகத்துக்கும் பெருமைக்கும் சிறிதேனும் தகுந்தவனல்லன். இவனுடன் வாழ்ந்து நாம் என்ன இன்பம் பெறக்கூடும்? ஆகையால் இவனைச் சிறிதும் பொருட்படுத்தாமல், நம்மிஷ்டப்படியே நாம் இருக்க லாம். இவன் நம்மை என்ன சொல்ல முடியும்?' என்று எண்ணித் தன் மனம் போனபடி நடந்து வந்தாள். கணவனை உலர்ந்த புல்லுக்குந் தாழ்ந்தவனாக நினைக் 5aurтаттвіт. இ நூல்: இராஜ தரங்கிணி பக்கம் 41, 42.

  • ஆப்ரகாம் லிங்கனின் மனைவி

ஆப்ரகாம்லிங்கன் அமெரிக்காவின் சுதந்திரத்தை நிலை நாட்டிய மேதை-வீரத்தியாகியும் ஆ வார். அவருக்கு வாய்த்த மனைவியோ ஆத்திரக்காரி! அறுபது நாழிகையிலும் அவரை தொந்தரவு செய்தவண்ண மிருப்பாள். அவரது வேலைகள் அனைத்துக்கும் அவள் இழைத்த இடையூறுகளும் தீங்குகளும் எண்ணிலடங்கா. ஒரு முறை அவர்களுக்குள் நேர்ந்த வாக்கு வாதத்தின் பயனாக, அந்த அம்மாள் ஆபிரகாம்லிங்கனின் முகத்திலே ஒரு கோப்பை சூடான காப்பியைக் கொட்டிவிட் டாளாம்! இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? உலக மேதைக்கு வீட்டிலே இந்த வரவேற்பா? இ இதழ்-அன்னை, (1959) இராம பாயி இராமாபாயி-இவள் காசியிலிருந்த சந்தராசன் மகள். அரிபக்தியும் பாகவத பக்தியும் கொண்டவள். இவளை மணந்தவன் புலால் உண்பவன். அவன் ஒருநாள்