பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5, 8 நடந்த விவாக சம்பந்தங்களெல்லாம் நிஷேதிக்கப்படும்: என்றான். e நூல் : ராஜபுத்ர வீரர்கள் (1938). பக்கம் 27.28. நூலாசிரியர்: T. லஷ்மி நாராயண ஐயங்கார் . B. A. & அனங்க லேகை பாலாதித்தியனுக்கு அனங்க லேகை என்னும் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் சிறுமியாயிருக்கையில் அவள் ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர்கள் இப்பெண் தனது வாழ்க்கையில் மிக்க சுகத்தைப் பெறுவாள். இவளை மணக்கும் கணவன் காஷ்மீர தேசத்திற்கு அரசனாவான்' என்றுரைத்தார்கள். நாளடைவில் பெண்ணுக்கு மணம் செய்விக்க வேண் டிய பருவம் வந்தது. அரசன் தன்னிடம் குதிரை லாயத் திற்கு எஜமானனாக வேலைப் பார்த்து வந்த துர்லப வர்த்தனன் என்பவனுக்கு தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தான். அணங்க வேகையை மணந்த சிறிது காலத் திற்குள் துர்லப வர்த்தனன் மிக்க துயரத்திற்காளாயினன். அனங்க லேகை தன் கணவனைக் கொஞ்சமேனும் மதிக்க வேயில்லை. "நமக்கு வாய்த்திருக்கும் கணவன் நம் தகப்பனா ரிடம் வேலை பார்த்து வந்தவன். ஒருவிதமான செல் வமும் செல்வாக்கு மில்லாதவன். நாமோ, அரசருடைய மகள்; அரசரிடம் மிகவும் செல்வாக்குப் பொருந்தியவள். மணத்திற்கு முன் தகப்பனாருடன் செல்லுங்கால், நம் கணவன் நம்மைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து தலைவணங்கி வந்தனம் செய்தவன். இவன் நம்முடைய