பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 மகாகவி மில்டனின் மனைவி மேரி பவல் மில்டன் என்னும் மகாகவியும் தனது மனைவியிடம் மிகத்தொல்லைப் பட்டாராம். அவர் மனைவி இன்ப வாழ்க்கையில் இச்சை மிகுந்தவள். அதிரூபவதி. நல்ல யுவதியும்கூட. மில்டன்அவளது இளமைக்கு அடிமையாக இருந்து வந்தார். ஆனால் அவளது கடும் சொற்களைக் கேட்டு நடுநடுங்குவாராம்! ஒருநாள் மில்டனின் நண்பர் ஒருவர் அவரைக் காண வந்திருந்தார். அவர் மில்டனின் மனைவியைப் பார்த்து விட்டு தனது நண்பனிடம் (மில்டனிடம்) நண்பரே! உமது மனைவி மலர்ந்த ரோஜாவைப் போன்று இருக்கிறாள்' என்று கூறினாராம். அதற்கு மில்டன் 'நண்பா! நானோ குருடன். அழகு மிகுந்த அந்த ரோஜாவைக் கண்டு களிப்பதற்கு நான் கொடுத்து வைக்கவில்லை! ஆனால், அதன் முட்கள் தினமும் என்னைக் குத்துகின்றன! அந்த வேதனையைத் தான் சிறிதும் பொறுக்க முடியவில்லை' என்று பதில் அளித்தாராம். 0 இதழ்-அன்னை, 1959. மகான்ஷைகு சாஅதியின் மனைவி சாஅதியின் குடும்ப வாழ்க்கைபற்றிப்பரிபூரணமான விவரங்கள் கிடைக்கவில்லை. நாற்பது வயதுக்கு முன்னர் அவர் மணஞ் செய்துகொண்டாரா, அல்லது அதுவரை லட்சியமற்ற நாடோடியாக ஊர் சுற்றிப் பார்க்கும் கவ னத்தில் இதுபற்றி நினைக்கவே இல்லையா என்பது தெரியவில்லை. தனது பிற்காலத்தில் அவர் அரேபியா வில் ஒரு தடவை மணம் செய்துகொண்டதாகவும். அந்த