பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மனைவிக்குப் பிறந்த புத்திரன் காலமாகிவிட்டதாகவும். சாஅதி எழுதிய இரங்கற்பா ஒன்றிலிருந்து தெரியவரு கிறது. இந்த மனத்துக்கு முன்பு அவருடைய நாற்ப தாவது வயதுக்குப் பின்னர் அவர் சுற்றுப்பிரயாணம் செய்த சமயம் ஒரு தடவை திருமணம் புரிந்து, ஆற் றொணாத் துன்பத்தை அனுபவித்திருக்கிறார். திருமணம் நடைபெற்ற சில நாட்களில் சாஅதியின் மனைவி தன் சொரூபத்தைக் காட்டலானாள், தன் திரையைக் கிழித்தெறிந்தாள் எடுத்ததற்கெல்லாம் சாஅதியைத் திட்டலானாள். சாஅதி மகிழ்ச்சியையே மறந்தவரானார். 'சாஅதி சொல்கிறார். நரகமும் சுவர்க்கமும் வீட்டில்தான் இருக்கின்றன. நல்லவனுக்குத் தீய மனைவி கிடைத்தால் அவன் இவ்வுலகிலேயே நரகத்தில்தான் இருப்பான்' என்று. - - அவள் எப்போதுமே அவரை ஏளனமாகவே பேசுவது வழக்கமாகிவிட்டது. இதைச் சாஅதியால் சகிக்கவே முடியவில்லை. துடுக்கும் அஞ்சா நெஞ்சமும் படைத்த மனிதர்! அரசாங்கச் சட்டங்களை யெல்லாம் துச்சமாக மதித்தவர் கேவலம், ஒரு பெண்பிள்ளையிடம் வசமாக அகப்பட்டுக்கொண்டு தமது இதயத்திலிருந்து இரத்தம் சொட்டவிட்டுக் கொண்டிருந்தார். 0 நூல்: மகான் ஷைகு சாஅதி (1956) பக்கம் 41, 42, நூலாசிரியர்: ஆர். பி. எம். கணி பி. ஏ. பி. எல். மூன்றாவது முராத் தில் மனைவி இரண்டாவது ஸ்லீமுக்குப்பின் 1574-இல் கலீபா வாக வந்தார் மூன்றாவது முராத் ஆவார். இரண்டா வது ஸ்லீமுக்கு 6 குமாரர்கள் இருந்தும், அவர்களுள் வீர ராக இருந்த முராத் என்பவரே பட்டத்துக்கு வந்தார்.