பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இவர் வெனீஷிய அடிமைப் பெண் ஒருத்தியின் அழகில் ஈடுபட்டு, அவளை மணந்தார். அவள் முஸ்லிமானபின் ஸ்பிய்யா என்ற பெயருடன் விளங்கினாள். *ஸ்பிய்யா தன் கணவரைத் தன் விருப்பத்திற் கிணங்க நடத்தி வந்தாள். முராத் அவள் கருத்திற்கு மாறாக நடப்பதே கிடையாது. முராத் ஆட்சியில் இந்த ஸ்-ல்தானாவின் அபிமானம் பெற்றவர்கள்தாம் உயர் பதவிகளை அடைய முடிந்தது. இதனால் நாட்டு நிர்வாகம் சீர்கேடடையத் துவங்கியது. - - .ே நூல்: வீரத் துருக்கி வல்லரசு ( ) பக்கம் - 31 நூலாசிரியர்: பு. செல்வராஜ்(உதவிஆசிரியர் "தாருல் இஸ்லாம்')

  • துருக்கியில் இப் பெண்மணி சுல்தானா வலிதா என்ற

பெயருடன் விளங்கினாள். ராஜபுத்ரன் மனைவி முன்னொரு காலத்தில் மீவார நாட்டு ராணா ஒருவர் தமது மகளை ஒர் அந்நிய நாட்டு ராஜபுத்ரனுக்கு மணம் புரிவித்து அவளைத் தமக்குட்பட்ட ஸ்ாத்ரி ஜில்லாவின் ஜாகீருக்குத் தலைவனாக்கினார். ரானாவின் மகள் தனது புருஷனுடைய குறைந்த அந்தஸ்தைப் பற்றி அவளைச் சட்டைபண்ணாதிருந்தாள். ஒரு நாள் அவன் தனது மனைவியைப் பார்த்து, 'ரானாவத்ஜி கொஞ்சம் தீர்த்தம் கொண்டுவா’ என்று சொல்ல, அவள், 'நாலு அரசர்களுக்கு அரசான ரானா வின் மகள் கேவலம் லாத்ரி ஜில்லாத் தலைவனுக்குத் தண்ணிர் துரக்கிவர முடியாது’’ என்று உதாசீனமாய்ப் பதிலளித்தாள். 'நல்லது, எனக்குப் பிரயோஜனம் இல் லாமல் நீ என் வீட்டில் இருக்கவேண்டிய அவசியமில்லை. உன் தகப்பன் வீட்டிற்கே போகலாம்' என்று சொல்லி