பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விட்டு, உடனே அத்தலைவன் ஒரு தூதன் வழியாய் ராணவுக்கு நடந்ததை யெல்லாம் சொல்லியனுப்பினான். அவளும் அத்துதனோடேயே தன் தகப்பன் வீட்டிற்குப் போய் விட்டாள். - 0 நூல்: ராஜபுத்ர வீரர்கள் (1938) பக்கம்-26 நூலாசிரியர்: T. லக்ஷ்மிநாராயண ஐயங்கார், வேதநாயக சாஸ்திரியாரின் மனைவி மிக்கேல் முத்தம்மாள் வேத நாயகம் என்ற பெயரில் நல்லிசைப் புலவர் மூவர் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர். அவர்கள் மூவருமே தமிழிசையால் இறைவனைப் பாடித் தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்துப் புகழ் பெற்றவர்கள். அவர் களுள் ஒருவர் தமிழுலகம் நன்கு அறிந்த மாயூரம் வேத நாயகம் என்பவராவர். மற்றொருவர் மறைத்திருவாளர் சேர்வை வேதநாயகம் என்பவராவர். மற்றுமொரு வேத நாயகம்ஆண்டு 1774இல் திருநெல்வேலியில் பிறந்து, பின் னர் தஞ்சையில் வாழ்ந்து தமிழ் பாடிய வித்தகராவர். வேதநாயகம் சாஸ்திரியார் என்று இன்றளவும் ஆயிரக் கணக்கான அன்பர்களால் நினைந்து போற்றப்படுகிற பாவலர்இவர்.பலப்பலகீர்த்தனைகளையும்கீதங்களையும் வர்ணங்களையும் உருவாக்கிப் பொதுவாகத் தமிழுலகிற் கும்,சிறப்பாகக் கிறித்து நெறித் திருச் சபைக்கும் வழங்கி பிருக்கிற இவர், நூற்றிருபதற்கும் மேலான எண்ணிக்கை யுள்ள சீரிய கவிதை நூல்களைப் படைத்த பெரும் புலவராவர். முதல் மனைவியாரின் மரணத்திற்குப் பின்னர் இரண் டாம் மனைவியாராக வாய்த்த மிக்கேல் முத்தம்மாள் இக் கவிராயருடைய நெஞ்சில் முள்ளாக மாறினார். கல்வியில் தேர்ச்சியுற்றிருந்த அந்த அம்மையார் அவரை