பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 விட்டுத் தாயகம் சென்று விட்டார். வேத நாயகர் வேதனையுற்று, பல முறை முயன்றும் அந்த அம்மை யார். திரும்பி வரவில்லை. பாவலர் என்ன செய்வார் "எண்ணறக் கற்றும் எழுத்தறப் படித்தும் பெண்புத்தி பின்புத்தியே’’ என்று பாட்டெழுதி வருந்தினார். வேறு என்ன செய்வார்? 0 நூல்: தஞ்சை வேதநாயகர் தமிழ்விேருந்து (1975) நூலாசிரியர்: பொன்னு ஆ. சத்திய சாட்சி பக்கம்- 1,88 சென்னைக் கிறித்தவக் கல்லூரி) ஸ்ாந்திப்பே சாக்ரட்டீஸ் கி.மு. 469-இல் பிறந்தவர். அவரது பிதா லோப்ரானிஸ்கஸ் (Sophroniscus) என்ற ஒரு சிற்பி. அவர் தாய் டானரீட் (Phaenarete) என்ற ஒரு மருத்து வச்சி. ஸ்ாக்ரட்டீஸ் இளமைப் பருவத்திலேயே தமது குல வித்தையிற் கை தேர்ந்து பல சிலைகளைச் செதுக்கினார். அவற்றில் மூன்று பிற்காலத்தில் வெகு நாள் வரை இவரு டைய வேலைப்பாடென்று ஆதன்ஸ் காட்சிச்சாலை யில் (Acropolis) நிறுத்தப்பட்டிருந்தன. ஸ்ாந்திப்பே (Xanthippe) என்ற ஒரு பெண்ணை அவர் மணந்து மூன்று ஆண் மக்களைப் பெற்றார். இவளை அவர் மணந்த வருஷம் நமக்குத் தெரியாது. இவள் மிகவும் கொடியவள்; பிடாரி: கணவனையும் குழந்தைகளையும் கடிந்து பேசுவாள்; திட்டுவாள்; தினமும் வீடு அமர்க்களம்போல் விளங்கும். வெடித்த சொல்லை வேண்டும் போதெல்லாம் அங்குக் கேட்கலாம். தனது துர்க்குணங்களால் மிகவும் பொல்லாதவளென்று பேர் வாங்கின. அவள் இழைக்கும் கொடுமைகளையெல்