பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 லாம் அவர் அதிகப் பொறுமையுடன் சகித்து வந்தார். ஒரு நாள் தம் மனைவி கூறும் தீ மொழிகளைப் பொறுக் கக்கூடாமல் அவர் தமது வீட்டை விட்டு வெளியேறி, வாயிற்படியில் உட்கார்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தா ரெனவும், கோபாக்கினியால் தபிக்கப்பட்ட அவரது மனைவி மேல்மாடி சென்று அசுத்த நீர் நிறைந்த பாண்டத்தை எடுத்து அவரது தலைமேல் கவிழ்த்து விட்டாளெனவும், பாவம்! ஸ்ாக்ரட்டிஸ் ஒன்றுஞ் செய்யத் தோன்றாமல் சிறிது திகைப்படைந்து, பின்னர் புன்னகையுடன், 'முன்னே இடியிடித்தது. இப்போது மழை பெய்தது!’ என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டுப் போய் விட்டாரெனவும் கூறுவர். இன்னும் அவள் தனது குழத்தைகளையும் கொடுமையாக நடத்தி வந்தாளென்றுங் கூறுவர்.

ைநூல்: ஸாக்ரட்டீஸ் சரித்திரம் (1919) (இரண்டாம் பதிப்பு) பக்கம் - 5, 6, நூலாசி ரியர்: R. ரெங்காசாரியர், எம்.ஏ. எல்.டி: (மதனப்பள்ளிக் காலேஜ் ஆசிரியர்)

சந்தனு மகாராஜனின் மனைவி பிரதீபனுடைய இளையமகனாகிய சந்தனு மகா ராசன் வேட்டைக்குச் சென்று தாக சாந்திக்காகக் கங்கையை அணுகி வருகையில் ஒரு மரத்தடியில் அழகிய பெண் ஒருத்தியைக் கண்டு "நீ தனியே வந்த காரண. மென்னவென்று வினவ, சாபத்தினால் இவ்விடம் வந் இருக்கிறேனென்றாள். சந்தனு அவளைக் கலியாணஞ் செய்ய விரும்பியபோது அவள் 'தன் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளைக் கொன்றுவிடுவேன். அதற்கு நீ தடை செய்யேனென்று உறுதிசொன்னால், உன்னைக் கூடு கிறே னென்றாள். காமவெறி கொண்ட ராசன் அதற் குடன்பட்டு அவளை கூடி வாழுங்கால், அவள் ஒரு புத்தி