பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I ரனைப் பெற்றுச் சலத்தில் எறிந்துவிட்டாள். இவ்வாறு ஏழு புத்திரர் போக எட்டாவது பிள்ளையைப்பெறுகிற தருணத்தில் இந்த ஒன்றை மாத்திரம் கொல்லாதிருக்க ராஜன் பிரார்த்தித்தான். நீ என் கருத்துக்குக் கெடுதி செய்தபடியால் உன்னைவிட்டு நீங்குவேனென்று அவள் வெளிப்பட்ட உடனே, சந்தனு மிகவும் ஆற்றாமைப் பட்டு மறித்தான். நான்சாபத்தினால் வந்தவள். என் கருத்து நிறைவேறிற்று. நீ இனி என்னை நம்பாதே. அந்தச் சாபத்தை உனக்குச் சொல்லுகிறேன் கேளென் றாள. e நூல் : மகாபாரத சங்கிரகம் (1870) ஆதிபர்வம் பக்கம் - 22, நூலாசிரியர் : தரங்கை மாநகரம் ந. உ. சுப்பராயலு நாயகர். ஒரு குடியானவன் மனைவி ஒளவை பசியால் ஒரு சமுசாரியை அன்னங்கேட்க அவன் பெண்டாட்டி கோபித்தபடியால், இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப- வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஒடினான் தான். எனவும், காணக்கண் கூசுதே கையெடுக்க நானுதே மாணொக்க வாய் திறக்க மாட்டாதே-வீனுக்கென் என் பெலாம் பற்றி எரிகின்ற தையையோ அன்பிலான் இட்ட அமுது. எனப் பாடித் தம்மை வணங்கிய அச்சமுசாரியின் இல் வாழ்க்கையை யிகழ்ந்து,