பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

  • நான் மன்னனாக இருந்தபோது 1941-லிருந்து 10-ஆண்டுகளுக்கு என் மீது பல அழகிகள் மோகம் கொண்டதும், நான் பாப காரியங்களைச் செய்ததும் உண்மையே என்று ரேடியோ பேச்சு ஒன்றில் அப்பட்ட மாகத் தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட இவர், தமது 5 வயது குழந்தை ஒன்று செத்தவுடன் முழுக்க முழுக்க நல்லவராக மாறிவிட்டார்.
ைஇதழ்: தினத் தந்தி. கட்டுரையாளர்: அருண்

துளசி தாசர் அக்பர் பாதுஷாவினிடம் நீதியில் மிக்க அமைச்சர் திலகராகத் துளசிதாசர் இருந்த காலத்தில், அத் தாசரைச் சோதித்து ஆட்கொள்ள மாமாயன் திரு வுள்ளங் கொண்டான். அதனால் துளசிதாசர் மனம் வேறுபட லாயிற்று. துளசிதாசர் தக்க வாலிப தசையை யடைந்திருந்தார். அதனால் அவர், தம்மை யொத்த வயதையுடைய சில கொடிய வாலிபர்களுடன் நட்புக் கொள்ளலானார். கெட்டவர் கூட்டத்துள் கலந்ததால் துளசிதாசரைக் கேடுகள் பல விரைவிற் சூழ்ந்தன. அவருடைய நண்பர்களாகிய கொடிய வாலிபர்கள், அவரை டில்லி மா நகரின்கண் மூலைக்கு மூலை யழைத் தேகினார்கள்: தெருக்கள் தோறும் அழைத்துச் சென் றார்கள்: ஆங்காங்குப் பல கொடிய தொழில்களைச் செய்யலானார்கள்: முடிவில் துளசி தாசரை ஒரு விலை மாதின் வீட்டிற் குடியிருக்கச் செய்தார்கள். அறிவிழந்து, அரசரிடம் செல்லுதலையு மொழித்துத் தாசியின் வீட்டிலேயே வாழ்ந்திருக்கலானார் துளசிதாசர். e நூல்: துளசிதாசர் (1926) பக்கம் - 19,20, 21 நூலாசிரியர்: ம. க. ஜெயராம் நாயுடு (திருவல்லிக்கேணி, கெல்லட் ஹைஸ்கூல் தமிழாசிரியர்)