பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கொடுக்கும் ரத்னாசாரி தேவி என்ற ஜப்பானிய அழகியை மணந்து கொண்டார். 0 இதழ்: சுதேசமித்திரன் 22-6-1970 சிகானுக் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாகிய கம்போ டியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதுடெல்லி யில் சமரசப் பேச்சுகள் நடந்தன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தமது பிரதிநிதிகளைக் கம்போடியா வுக்குத் திருப்பி அழைத்து விட்டார் அதன் பிரதம மந்திரி சிகானூக். பலவகைகளில் இவர் ஒரு அதிசய மனிதர். இவர் 19-வது வயதில் 1941-ல் சிம்மாசனம் ஏறினார். இவருக்கு மனைவிகள் 6 பேர். மகன்கள், மகள்கள் 14. இவரது கடைசி மனைவி மோனிக் என்பவள் இதாலியருக்கும் கம்போடியருக்கும் பிறந்த பேரழகி ! 1951-ல் அழகுப் போட்டி ஒன்றில் இவளுக்குப் பரிசு கொடுக்கும்போது முதன் முதலாக இவளைச் சந்தித்துக் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார் சிகானூக். இந்தப் பிரதம மந்திரிக்குக் காவியம் புனையத் தெரியும் ! ஒவியம் தீட்டத் தெரியும்! குதிரை சவாரியில் கெட்டிக்காரர். பல விளையாட்டுகள் விளையாடத் தெரியும். பன்மொழிப் புலவர். சினிமா காமிராவை இயக்கத் தெரியும்! இவர் தமது அரண்மனையிலேயே சொந்த ஸ்டுடியோ அமைத்து, தர்மத்திற்காக சினிமா படம் எடுத்து வெளி யிட்டார். அதில் இவரே கதா நாயகன்! அரசாங்க ஊழியர்களே. துணை நடிகர்கள்.