பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகர்ணோ (1901-1970) 22 ஆண்டுகளுக்கு முன், 3000 அழகிய தீவுகளைக் கொண்ட நாட்டின் அதிபராகி, 1 கோடி மக்களின் தலைவனாகப் போற்றப்பட்டு, "சகோதரனே' என்று அவர்களால் அன்பொழுக அழைக்கப்பட்டு வந்த இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகர்ணோ ஒரு காதல் மன்னன். வாழ்க்கையின் அழகிய பொருள் அனைத் திலும் மனதைப் பறிகொடுத்த சுகர்னோவைச்சுற்றிலும் எப்போதும் என்றுமே ஆரணங்குகள் கூட்டம்; கன்னியர் களுடன் தன் தலைவன்' நடத்தும் களியாட்டங்கள் கண்டு, முகம் சுளிக்காத வெள்ளை உள்ளம் கொண்ட மக்களைத் தன் நாவன்மையால் மகுடிக்கு உறங்கிய பாம்புகள்போல் ஆக்கிப் பகட்டான வாழ்க்கை நடத்தி யவர் சுகர்ணோ. தன்னைப் பெரிய காதல் மன்னன் என்று சுகர் ணோவே கூறிக் கொண்டார். 'என் நாட்டை நாட்டு மக்களை, மாதரை, கலையை, அதற்கெல்லாம் மேலாக என்னையே நான் நேசிக்கிறேன்' எனத் தனது சுய சரிதையில் சுகர்ணோ கூறியுள்ளார். சுகர்னோவின் மனைவிகள், ஆசை நாயகிகள் எவ்வளவு பேர் என்பது பற்றிப் பல பேர் பலவிதமாகப் பேசுகின்றனர். மாணவப் பருவத்திலேயே சுகர்னோ ரகசியமாக ஒரு பெண்ணை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் சில காலம் நீடித்தது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுகர்ணோ மத வழக்கப்படி, பத்மாவதி என்பவரை முதலில் மணந்து கொண்டார். பின்னர் 1954-ல் ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் இருந்த ஹர்தினி என்ற விதவையை இரண்டாவது மனைவியாக்கிக் கொண் டார். பின்னர் புகைப் படங்களுக்குப் "போஸ்’’