பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாடில்-சாக்ரடீஸ்-ஒனாசிஸ்சைத் திருமணம் செய்து கொண்டதற்குக் காரணம் என்ன? காதலா? அல்லது கோடீசுவரன் என்பதா? தனது ஆடம்பரச் செலவுகளை ஏற்க ஒரு கோடீசு வரன் தேவை என்று ஜாக்குலின் தீர்மானித்ததாகச் சிலர் சொல்லுகிறார்கள். ஜாக்குவின், இந்த இரண்டாவது திருமணத்திற்கு முன்பு தன்னுடன் பழகிய பல ஆண்களைப் பொம்மை களைப் போல விளையாடி இருக்கிறார். இவருடன் அடிக்கடி காணப்பட்டவர்களில் அமெரிக்க உதவி ராணுவ மந்திரி ரோஸ்வெல், கவிஞர் சியோனார்டு, இங்கிலாந்து பிரபு லார்டு ஆற்லிக், ஸ்பானிஷ் தூதர் டியாஸ், டைரக்டர் மைக்னிக்கல்ஸ் (வயது 36). விளை யாட்டு நிருபர் ஜார்ஜ் (வயது 41) முதலியோர் உண்டு. இங்கிலாந்து பிரபு லார்டு "ஆர்லிக் சை:ஜாக்குவின் திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என்று பலர் கருத்து தெரிவித்தனர். (இந்தப் பிரபு மனைவியை இழந்தவர்). ஒருவருடன் ஜாக்குவின் பலநாள் வெளியே சென்றா லும், திடீரென்று அந்த நபரைக் கைவிடுவாராம், அந்த நபர் பல தடவை டெலிபோன் செய்தாலும், ஜாக்கு லின் பேசமாட்டாராம். கடைசியாக ஒனாசிஸ்சுக்கு அடித்தது "அதிருஷ் டம்' சென்ற மே மாதம் முதல் திருமணத்திற்கு ஒனாசிஸ் வற்புறுத்தி வந்தார். செப்டம்பரில் டெலி போன் மூலம் அவருக்கு ஜாக்குவின் சம்மதம் தெரிவித்து உலகைப் பிரமிக்க வைத்தார். () இதழ் : தி ன த் த ந் தி, கட்டுரையாளர்

  • அருண்