பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. பி. யு. சின்னப்பா பிரபல நடிகர் பி. யு. சின்னப்பா சென்ற மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டையில் போலீசாரால் 'மது வருந்திய’. குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பிறகு அவருக் குச்சொந்தமான இரு வீடுகளிலிருந்து மதுபானவகைகள் கண்டுபிடிக்கப் பட்டனவாம். அதோடு கூட மது வருந்தி யிருந்த சமயத்தில் சின்னப்பா தம் அண்டை வீட்டுக் காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோ ருக்குப் படுகாயங்களை ஏற்படுத்தியதாகவும் சொல்லப் படுகிறது. சின்னப்பா தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் பிரதி தினமும் அவர் நகர இன்ஸ் பெக்டர் முன் ஆஜராக வேண்டுமாம். அவர் மீது இ. பி. கோ 326-வது பிரிவின் கீழும், மதுவிலக்குக் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. லைசென்ஸ் இல்லாமல் பிராந்திப் புட்டிகள் வைத்திருந்த தற்காக இருநூறு ரூபாய் (200) அபராதம் விதிக்கப் பட்டது. சின்னப்பா தாம் குற்றவாளியென. ஒப்புக் கொண்டார். 0 இதழ் : குண்டுசி 26-7-1948 சூ-யென்-லாய் உலகிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட கம்யூனிச நாடான சீனாவின் பிரதமர் கு-யென்-லாய் ւն3il அருந்துவதில் விருப்பமுள்ளவர். இவருக்கு *மாவ்தாய்’ என்ற மதுதான் மிகவும் பிடிக்கும். *மாவ்தாய் மதுவை இவர் அடிக்கடி அருந்துவாராம். 0 இதழ்: கல்கண்டு (3-1-1974) பக்கம்-31 வெ-6