பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 124


அவன் முடுக்கிவிட்ட நேர்மையென்னும் சுற்றுவட்டம் உலக முழுமையும் தழுவுகின்றவரையில் தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது. மனிதர் அனைவரும் அதன் வயப்படுகின்றனர்.

உண்மை ஆர்வமுடைய மனிதன் தான் செய்பவை அனைத்திலும், தான் தொடர்பு கொள்ளுகின்ற மக்கள் அனைவரிடமும் தனது குணவியல்பைப் பொறித்து விடுகின்றான். ஒரு காலத்தில் அவன் ஒரு சொல்லைக் கூறுகின்றான். அது எவருடைய மனத்திலேனும் பதிந்து விடுகின்றது. அதன் செல்வாக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவரிடமாக அறிவிக்கப்படுகின்றது. பத்தாயிரம் கற்களுக்கப்பால் நம்பிக்கை இழந்து நிற்கும் ஒரு மனிதர் இதைக் கேள்வியுற்றுத் தம்மைச் சீர்படுத்திக் கொள்கின்றார். அத்தகைய ஆற்றலே ஓர் ஆக்கமாகும். அதனுடைய பெறுமானம் நாணயத்தால் மதிப்பிடக் கூடாதது. பண்பென்னும் விலைமதிக்க முடியாத மாணிக்கங்களைப் பணத்தால் கொள்முதல் செய்யவியலாது; ஆனால் நேர்மையான உழைப்பிற்கு அஃது இயலுவதாகும்.

தன்னைத் தானே உண்மை ஆர்வமுடையவனாக ஆக்கிக் கொள்பவன், தன் வாழ்நாள் முழுவதும் ஓர் உரமான நிறைவைப் பெற்றுத், தனிச் சிறப்பு வாய்ந்த வெற்றியும், அரிய ஆற்றலுடைய மனிதனாகி விடுகின்றான். உண்மை ஆர்வமென்னும் வலிமையான தூண் அத் திறத்ததாகும். ஒரு முறை அது முழுமையாக எழுப்பப்பட்டுவிட்டால் ஆக்கமெனும் ஆலயம் நிலைப்பாடு