பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 126



நடுநிலை

தப்பெண்ணம் தவிர்த்திடுதலே ஒரு பெரும் நன்மையாகும். தப்பெண்ணம் மனிதனின் பாதையில், உடல் நலம், வெற்றி, மகிழ்ச்சி, ஆக்கம் இவற்றிற்கு எதிராக இடையூறுகளைக் குவிக்கின்றது. ஆகவே, தன்னுடைய கற்பிதமான பகைவர்களுக்கு எதிராக அவன் தொடர்ந்து போட்டி இடுபவனாகி விடுகின்றான். தப்பெண்ணம் நீக்கப்பட்டுவிடின் அவர்கள் நண்பர்களாகவே தோற்றமளிக்கின்றனர். தப்பெண்ணமுடைய மனிதனுக்கு வாழ்வு ஒரு விதமான தடை கடப்புப் பந்தயமாகி விடுவது உண்மையே. தடைகளைக் கடந்து செல்ல முடியாததும் குறிக்கோளை அடைய முடியாததுமான ஒரு பந்தயம்; நடுநிலையுடைய மனிதனுக்கு அவன் வாழ்வு, மனத்திற்குகந்த நாட்டினில் நாள் முடிவில் உணவும், ஓய்வும் கிடைக்கக் கூடிய ஒரு நாள் நடையேயாகும்.

மனிதன் நடுநிலை எய்த வேண்டுமெனின், தன் சொந்தப் போக்குப்படியன்றிப் பிற எப்போக்குப் படியும் எதையும் காணுவதைத் தடுக்கின்ற உள் அகந்தையை அவன் அகற்றியாக வேண்டும். அது ஒரு பெரும் பணியென்பது உண்மையே ஆனால் மேம்பாடானது. உடனே செய்து முடிக்கக் கூடாததாயினும் இப்போதே தொடங்கிவிடுதற்கு உரியதாகும். உண்மையால்