பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

ஜேம்ஸ் ஆலன்


“மலைகளையும் அகற்றிவிட” முடியும். தப்பெண்ணம் மனத்தின் மலைத் தொடர்ச்சியாகும்; ஒருதலைச் சார்பானவன் அதற்கு அப்பால் காணுவதோ, அதற்கு அப்பாலும் உண்டு என நம்புவதோ இல்லை. எவ்வாறெனினும், இந்த மலைகள் அகற்றப்பட்டுவிடின், உற்றுநோக்குகின்ற கண்களை மகிழ்விக்கும் வகையில், ஒளியாலும் நிழலாலுமான, நிறத்தாலும் குரலாலுமான மேன்மையான ஓவியமாக மன நிலைகள் முடிவற்ற ஒளிக் காட்சிக்குரியதாய்த் திறந்து வைக்கப்படுகின்றது.

முரண்பாடான தப்பெண்ணத்தைப் பற்றிக் கொண்டிருப்பதால் எத்துணையோ களிப்புகள் இழக்கப்டுகின்றன. பலரின் நட்பை இழக்க வேண்டியுள்ளது. எத்துணைப் பெரிய மகிழ்ச்சியும் ஊறுபடுத்தப்படுகின்றது. எத்துணை ஆக்கங்கள் அழிக்கப்படுகின்றன. எனினும், தப்பெண்ணத்திலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பது அரிய செயலாகும்.

தமக்கு அக்கறையுள்ள காரியங்களைக் குறித்து வாதிடுகையில் தப்பெண்ணம் கொண்ட ஒருதலைச் சார்பினராக இல்லாதோர் ஒரு சிலராகவே இருக்கின்றனர். நிகழ்ச்சி அனைத்தையும் கருத்தில் கொண்டு, காரியத்தில் உண்மையைக் காணும்பொருட்டுச் சான்றுகள் அனைத்தையும் சீர் தூக்கித் தனது செயலைக் குறித்து இரு சார்பிலும் நடுநிலை உணர்வுடன் உரையாடுபவனை ஒருவன் மிக அரிதாகவே காணுகின்றான். ஒருதலைச் சார்பினன் ஒவ்வொருவனும் தனது சொந்த வாதத்தையே நிலைநாட்ட முனைகின்றான். அவன் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. ஏனெனின், தன் சொந்த