பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 136


குறிப்பிட்ட காரியத்தில் கொண்டுள்ள குறிப்பிட்ட பொறுமையைக் குறிப்பதாகாது. ஆனால், பிறழ்வின்றிப் பிறர் நலம் காணும் தன்மை, எவ் வேளையிலும், மிகவும் சோதனையான சூழ்நிலைகளின் போதும் இனிமையான செவ்வி, எச் சோதனையும் கெடுத்துவிட முடியாததும், எத்தொல்லையும் முறித்துவிட முடியாததுமான மாறுபடாத, மென்மையான வலிமை ஆகியவற்றையே இது குறிக்கும். இது ஓர் அரிய உடைமை என்பது உண்மையே. மனித இனத் தொகுதியில் ஒருவன் நீண்ட காலம் எதிர்பார்க்கக்கூடாத ஒன்றுமாகும்; ஆனால், படிப்படியாக அடைந்துவிடக் கூடிய அறம் இதுவே. அறைகுறைப் பொறுமைகூட மனிதனின் வாழ்விலும், காரியங்களிலும், வியக்கத்தக்க அருமைகளை உண்டு பண்ணும். ஏனெனின், பொறுமையின்மை அழிவையே உண்டு பண்ணும். முன்கோபி மனிதன் விரைவாக அழிவை நாடுவான். குற்றச்சாட்டு அன்றி நுண்ணாய்வின் ஒரு சிறு சுடர் தன்மீது வீழ்ந்த மாத்திரத்திலேயே வெடிமருந்தைப் போன்று தொடர்ச்சியாக வெடவெடக்கும் மனிதனுடன் எவரே தொடர்பு கொள்ள விரும்புவர்? அவனுடைய நண்பர்கள் கூட ஒருவர் ஒருவராக அவனை விட்டு நீங்கிவிடுவர். ஏனெனின், ஒவ்வொரு சிறிய மாறுபாடும் தப்பெண்ணத்தின் மீதும் பொறுமையற்றதும், அனல் கக்குவதுமான நாக்கால் தன்னை முரட்டுத் தனமாகத் தாக்கும் மனிதனின் நட்பை யார் நாடுவர்?

ஒரு மனிதன் மிகவும் ஆக்கமுடையவனாக, பயனும், ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டுமெனின், தன்னை அறிவுடன் ஒழுங்குடன் அடக்கியாள வேண்டும்.