பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 144


தலைமுறைகளாக அவர்கள் இதுவரையில் புறவியலான சூழ்ச்சிகளையே ஆதாரமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். தற்போதும் அவற்றையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தம் இயல்பை ஆதாரமாகக் கொள்ளும் உறுதிப்பாடு கொண்டிருந்த ஒரு சிலரே தனிச்சிறப்புக்கு உரியவர்களாக்கப்பட்டு வீரர்களாக மேன்மைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். தனது சொந்த இயல்பே முனைந்து வெளிப்பட இடந்தரும் துணிவுடையவனும், தனது சொந்த இயல்பான பெறுமானத்தின் மீது நிலைகொள்ளும் வாய்ப்பினைத் தரும் வலிமையான உலோகம் போன்றவனுமே உண்மையான வீரனாவான்.

அத்தகைய வீரத்தை நாடுபவன் வலிைையத் தாங்கியே ஆகவேண்டும். போலி மரபு முறைப் பூச்சாண்டிகளால் அவன் தனது கொள்கைப் பிடியிலிருந்து விலகிவிடக் கூடாது. அவன் தனது நற்பெயருக் காகவோ பதவிக்காகவோ திருச்சபையில் தனது செல்வாக்கிற்காகவோ சமூகத்தில் தனது மதிப்பிற்காகவோ அஞ்சுதல் கூடாது. அவன் நில உலகின் எதிர்முனைகளில் உள்ள நடைமுறை நாகரிகங்களினின்றும் நீங்கித் தன்னுரிமையுடன் நடந்து கொள்வது போன்று, இத்தயக்கங்களினின்றும் நீங்கித் தன்னம்பிக்கையுடன் செயலிலீடுபடவும், வாழவும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் இச் சோதனையைத் தாங்கிய பின்பு அவதூறும், பழியும் அவனைத் தூண்டிவிடவோ, துயர்தரவோ முடியாது தோற்றுவிடுகின்றபோது அவன்